இனங்களுக்கிடையில் நல்லுறவை வளர்க்கும் நோக்கில் தென்பகுதியில் இருந்து வருகை தந்த பமுனுகம ரொட்டரி கழக உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மாங்கேணி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு ஒரு தொகை பொருட்களை அன்பளிப்பு செய்தனர்.
மாங்கேணி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை அதிபர் ரீ.கணபதிப்பிள்ளை தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் இந்து கருணாரத்ன, பமுனுகம ரொட்டரிக் கழக தலைவர் நெல்சன் ரொட்ரிகோ, டபிள்யூ.குமார் பெரேரா, வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரத்ன மற்றும் பமுனுகம ரொட்டரிக் கழக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது மல்டி மீடியா, புரஜெக்டர், சங்கீத வாத்தியக் கருவிகள், முதலுதவிப் பொருட்கள், புத்தகங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டதுடன், மாங்கேணி கிராமத்தில் வறிய குடும்பத்தை சேர்ந்த முப்பது குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டன.
.jpg)


0 comments :
Post a Comment