ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் முன், நேற்று பி.ப. 12.00 மணி முதல் மாலை வரை நடைபெற்ற ஆர்பாட்ட நிகழ்வில் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் பெரும் திரளான இலங்கையைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.
பிரித்தானியா – ஜெர்மனி – பிரான்ஸ் – இத்தாலி – சுவீடன் மற்றும் சுவிற்சலாந்து ஆகிய நாடுகளிலிருந்து கலந்து கொண்ட மக்கள் இலங்கையின் பிரச்சனையை இலங்கைக்கு தீர்த்துக் கொள்வதற்கு இடமளிக்குமாறு கேட்டு கோசங்களை முன்வைத்தனர்.
இப் போராட்டம் குறித்து எம்மிடம் கருத்து தெரிவித்த இலங்கைக்கான தூதுவர் ரவிநாத ஆரியசிங்க அவர்கள் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவு பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டு இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுக்க வந்திருப்பது கண்டு பெருமைப்படுவதாக தெரிவித்தார்.
அத்தோடு மிகுந்த கண்ணியத்தோடு சட்டத்துக்கு கட்டுப்பட்டு தமது போராட்டத்தை நடத்திய மக்களது குரலாக இலங்கையின் மீது கை வைக்காது நாட்டின் சிங்கள – தமிழ் – இஸ்லாமிய மக்களது ஒற்றுமையை சிதைக்காமல் இருக்க வேண்டும் என்பதாக இருந்தது.(அதி)







0 comments :
Post a Comment