பல்லாண்டு காலமாக சாய்ந்தமருது மக்களின் அவசர தேவையாகவும், ஒரு தாகமாகவும் இருந்து வந்தவைதான் சாந்தமருதுக்கு பிரதேச சபையாகும். இதனை எவ்வாறு எப்படி மற்றைய பிரதேச மக்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் பக்கத்து கிராமங்களுக்கும் அங்கு வாழும் தமிழ் மக்களுக்கும் எவ்வித அநீதி ஏற்படாத வகையில் சாய்ந்தமருது மக்களின் தாகத்துக்கும் இங்கு வாழும் மக்களின் கனவை நனவாக்கும் வகையிலேயே ஒரு பிரதேச சபை வழங்கப்படும் என உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் எ.எல்.எம்.அதாவுல்லா கூறினார்.
கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் தலைமையில் சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேட்பு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் எ.எல்.எம். அதாவுல்லா மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து கூறிய அமைச்சர்,
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இவ்வாறான கோரிக்கைகள் வந்து கொண்டிருப்பதாகவும் பிரதேச சபை ஒன்றை இலகுவாக அமைத்துவிட்ட போதும் அதற்க்கான வசதிகளை தேடிக்கொள்வதில் தான் சிக்கல்கள் ஏற்படுவதாக தெரிவித்தார். உதாரணமாக கட்டிடம் வாகனங்கள் ஆளணி என பல்வேறுபட்ட தேவைகளை உருவாக்க வேண்டும். சாய்ந்தமருது மக்கள் தேசிய காங்கிரசுக்கு சரியான அரசியல் அந்தஸ்த்தை வழங்குவார்களானால் அதனுடாக அவர்களுக்கு உள்ளுராட்சி அதிகாரங்களைக் கொண்டு பல தேவைகளை அடைந்து கொள்ளலாம்.
இலங்கையின் வரலாற்றில் இலங்கையை ஆண்டு வந்த தலைவர்களுக்கு முஸ்லிம்கள் மிகுந்த ஒத்துழைப்புடன் செயற்பட்டு வந்தார்கள் ஆனால் சமகால அரசியலில் சில முஸ்லிம் தலைமைகள் இன்று அரசாங்கத்துடன் இருந்து கொண்டு அதற்கு எதிராக நடந்துகொள்ளும் விதம் எவ்வளவு மோசமான செயல் இதை யார்தான் ஏற்றுக்கொள்வார்கள்.
அன்று நான் புரிந்து கொண்டதை இன்று சிராஸ் புரிந்து கொண்டிருக்கின்றார். இன்னும் புரியாதவர்கள், பரிந்து கொண்டும் புரியாதவர்கள் போன்று இருக்கின்றவர்கள் எத்தனையோ பேர் இருக்கின்றனர். அவர்களும் மிக விரைவில் தேசிய காங்கிரஸின் ஒரு நிதானமான செயற்பாட்டை புரிந்து கொண்டு இணையவுள்ளனர். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்றார்.
.jpg)
0 comments :
Post a Comment