மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கோரகல்லிமடு கிராமத்தில் இரு கோயில் உண்டியல்கள் புதன்கிழமை இரவு உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளது.
பாடசாலை வீதியிலுள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் மற்றும் ஏரிக்கரை வீதியிலுள்ள ஸ்ரீ காளியம்மன் ஆலயம் என்பவற்றின் உண்டியல்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடப்பப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இந்த இரண்டு கோவில்களிலும் கடந்த இரண்டு வருடங்களில் மூன்றாவது முறையாக உண்டியல்கள் உடைக்கப்பட்டுள்ளதாக நிருவாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஆலய நிருவாகத்தினரால் வியாழக்கிழமை ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸால் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
.jpg)


0 comments :
Post a Comment