காணாமல் போன மலேசியா விமானம் MH370 இந்தியா பெருங்கடலில் விபத்துக்குள்ளானது உண்மை எனவும் அதில் பயணம் செய்த யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை எனவும் மலேசியா பிரதமர் நஜீப் ரசாக் உத்தியோகபூர்வமாக பயணிகளின் உறவினர்களுக்கு தெரிவித்துள்ளார்.
நஜிப் கூறியதாவது:-
“இதுவரை நடந்த தீவிர விசாரணையின் முடிவில், மலேசிய விமானம் MH370 தனது வழக்கமான பாதையில் இருந்து விலகிப் பறந்து, இறுதியாக இந்தியப் பெருங்கடலோடு முடிவுற்றிருக்கிறது என்று தெரியவந்துள்ளது. பயணிகளின் உறவினர்களுக்கு இது ஒரு மிகவும் கடினமான நேரம் என்பதை உணர முடிகிறது. அவர்களுக்கு இந்த செய்தி நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு துயரமாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். எனவே ஊடகங்கள் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இது குறித்த மேல் விபரங்கள் நாளை அறிவிக்கப்படும்” இவ்வாறு நஜிப் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இத்தகவலை உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளார்.இந்த தகவல் அறிந்த உறவினர்கள் கண்ணீர் மல்க கதறி அழும் காட்சி..
http://www.aljazeera.com/news/asia-pacific/2014/03/families-told-plane-l...
http://www.huffingtonpost.com/2014/03/24/mh370-indian-ocean_n_5020832.html

0 comments :
Post a Comment