சுலைமான் றாபி-
நாளை 25.03.2014ம் திகதி நிந்தவூரில் காணப்படும் பதிவு செய்யப்பட்ட சகல விளையாட்டுக் கழகங்களின் தலைவர் மற்றும் செயலாளர்களுக்கான விஷேட கூட்டம் நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பி.ப. 4.00 மணியளவில் இடம்பெறவுள்ளதாக நிந்தவூர் பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.எம். றசீன் தெரிவித்தார்.
இந்த விஷேட கூட்டத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் விளையாட்டு கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் சம்பந்தமாகவும், இன்னும் மீதமாகவுள்ள விளையாட்டுக்களை நடாத்தி முடிப்பதற்கான கழகங்களில் ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்வதற்காகவுமே இந்த விஷேட கூட்டம் கூட்டப்படவுள்ளதாக விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.எம். றசீன் மேலும் தெரிவித்தார்

0 comments :
Post a Comment