சனத் ஜெயசூரியா மற்றும் குமார் சங்ககார, மஹேல ஜெயவர்தன ஆகியோருக்கு இடையில் 20-20 ஓய்வு தொடர்பில் ஏற்பட்டு இருந்த கருத்து முரண்பாடு முடிவுக்கு வந்துள்ளது. இதை சனத் ஜெயசூரியா தெரிவுத்துள்ளார்.
சரியான முறையில் கருத்து பரிமாற்றம் நடை பெறாமையே இந்த பிரச்சினைக்கு காரணம் எனவும், தானும் குமார் சங்ககார, மஹேல ஜெயவர்த்தன ஆகியோரும் பேசி இந்த பிரச்சினையை முடித்து விட்டதாகவும் தங்களுக்குள் எப்போதும் நல்ல உறவு முறை இருப்பதாகவும் சனத் ஜெயசூரியா தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாது எனவும் சனத் ஜெயசூரியா உறுதியளித்துள்ளார்.
இது எனது கடைசி 20-20 தொடர் என பத்திரிகை நேர்காணலில் சங்கா தெரிவித்து இருந்தாரே தவிர உத்தியோகபூர்வமாக தனது ஓய்வை அறிவிக்கவில்லை என சனத் ஜெயசூரியா கூறியுள்ளார்.
நல்ல முறையில் நீண்ட நேரம் இது தொடர்பாக கதைத்து சகல விடயங்களையும் சுமூகமாக தீர்த்துக் கொண்டதாக சனத் ஜெயசூரியா மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment