அஷ்ரப் ஏ சமத்-
இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றும் அனைத்து சகோதரர்களையும் 2014.03.24 திங்கற் கிழமை காலை 09 மணிக்கு வரலாற்றுத் தீர்மானம் எடுப்பதற்கு பொதுபலசேனாவினால் தாக்கப்பட்ட வணக்குத்துக்குரிய வடரக விஜித தேரரின் தலைமையில் முஸ்லீம்களை அழைப்பு விடுத்துள்ளார்.
மேற்படி விடயமாக நேற்று வெள்ளிகிகிழமை ராஜகிரியவையில் ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் அறிவித்தல் நோட்டிஸ் வழங்கப்பட்டது.
அத் நோட்டிசில் - முஸ்லீம் மக்களை இலக்காகக் கொண்டு பல்வேறு தீவிரவாத இயக்கங்கள் தொடர்ந்து முஸ்லீம் மக்களை துன்புறுத்தி வருகின்றனர்.
அண்மைக் காலமாக அவர்களது தீவிர நடவடிக்கைகள் எந்த வகையிலும் உசிதமானதல்ல. சட்டரீதியற்ற பொலீசார் தாம் எனக் கூறிக் கொண்டு தாய் நாட்டின் பொருளாதாரத்தை மட்டுமன்றி, சமயங்களைக் கூட தாக்கி மீண்டும் தாய் நாட்டை இரத்தக் களமாக்க முயற்சிக்கின்றனர்.
நமக்காக என்றும் குரல் கொடுக்கின்ற சமாதானத்தை நேசிக்கின்ற அதற்காக உழகை;கின்ற வண..வடரக விஜித தேரரின் தலைமையில் சகல சமயத் தலைவர்களையும் உள்ளடக்கி 2014.03.24ஆம் திகதி திங்கட்கிழமை காலை 09.00 மணிக்கு சகல சமயத்தலைவர்களையும் உள்ளடக்கிய வரலாற்றுத் தீர்மானம் ஒன்றை எடுக்க உள்ளனர்.
அத்தினம் வெள்ளை உடையுடன் காலி முகத்திடலுக்கு சமுகமளிக்கும்படி வேண்டுகின்றேன்.
இப்படிக்கு
சகல சமய இனங்களுக்கிடையே சமாதானத்திற்காக பிராத்திப்போர் என அந் நோட்டிசில் சிங்கள தமிழ் மூலம்
சகல கொழும்பில் உள்ள ஜும்ஆப் பள்ளிவசாலில் முன் விநியோகிகப்பட்டது
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment