நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தமது நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் -பொதுபலசேனா

நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தமது நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பொதுபலசேனா அமைப்பு கோரியுள்ளது.அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கியுள்ள அறிக்கையில் இலங்கையில் மத சுதந்திரம் மறுக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். 

இது அடிப்படையற்ற காட்டிகொடுக்கும் செயலாகும் என்று பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக்குற்றச்சாட்டு யதார்த்தமற்ற ஒன்று என்றும் ஞானசார தேரர் கூறியுள்ளார். அமைச்சர் ஹக்கீம் ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கியுள்ள 50 பக்க அறிக்கையில், இலங்கையில் பொதுபலசேனாவே மதப்பிரச்சினையை தூண்டிவிடுகிறது என்று குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன் சிறுபான்மையினரை கொடுமைப்படுத்துகிறது என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது ஏற்றுக்கொள்ளத்தக்க குற்றச்சாட்டு அல்ல. பொதுபலசேனாவை பொறுத்தவரையில் ஹலாலை சிங்களவர்களிடம் நடைமுறைப்படுத்துவதையே அது எதிர்க்கிறது.

 முஸ்லிம்கள் ஹலால் பொருட்களை நுகர்வதை பொதுபலசேனா எதிர்க்கவில்லை. இந்தநிலையில் அமைச்சர் ஹக்கீம் நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதாக ஞானசார தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :