கட்டுநாயக்க பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தற்போது பெருமளவிலானோர் வாழ்க்கை செலவு தொடர்ப்பில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
எவ்வாறாயினும் 30 வருட பயங்கரவாதத்தை ஒழித்தது போல் வாழ்க்கை செலவு தொடர்பிலான பிரச்சினைக்கும் தீர்வை பெற்றுக்கொடுக்கும் ஆற்றல் அரசாங்கத்திற்கு மாத்திரமே இருப்பதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.
30 வருடம் நீடித்த பிரச்சினையை இல்லாமல் செய்ய முடிந்தது யாரால்? எங்கள் அரசாங்கதினாலே, அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்துச் செல்வதும் எங்கள் அரசாங்கத்தினாலே, இவ்வாறான நிலையில் வாழ்க்கை செலவு பிரச்சினையையும் இந்த அரசாங்கத்தினாலே தீர்க்க முடியும் என அவர் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment