மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் நீங்களும் ஈடுபடலாம் - கட்டாயம் உதவுங்கள்



லேசிய விமானம் எம் எச் 370 கடந்த மார்ச் 8ம் திகதி மாயமானது. 239 பேருடன் விமானம் தொலைந்து 11 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் 13 நாடுகள் இணைந்து 57 கப்பல்களுடன் 48 விமானங்களைக் கொண்டு தொலைந்த விமானத்தின் எதாவது ஒரு தடயம் கிடைக்காதா என தேடி வருகின்றன.

தேடுதல் பணிக்கான எல்லை அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. இந்நிலையில் விமானத்தை தேடும் பணியில் ஆன்லைனில் ஈடுபட Tomnod.com தளத்தின் மூலம் உங்களுக்கும் ஒரு வாய்ப்பு கிட்டியுள்ளது.

Tomnod என்பது Digital Globe என்ற சாட்டிலைட் நிறுவனத்தின் இணையத்தளமாகும். இதில் சாட்டிலைட் படங்களை எடுத்து அவற்றின் புதிய பதிப்பை இணையத்தில் வெளியிட்டு வருகின்றது.

குறிப்பிட்ட சாட்டிலைட் படங்களின் மூலம் மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க உதவுமாறு அறிவித்தல் வெளிவந்ததும் இதுவரை சுமார் 3 மில்லியன் பேர் இணைந்து தேடுவதாக தெரியவருகின்றது.



http://www.tomnod.com/nod/ தளத்திற்குச் சென்று குறிப்பிட்ட சாட்டிலைட் படங்களில் விமானத்தின் பாகங்கள், அல்லது எண்ணைக்கசிவு அல்லது வேறு சந்தேகத்திடமான பொருட்களை கண்டுபிடித்தால் மேலுள்ள படத்தில் உள்ளவாறு அவற்றை உடனடியாக Tomnod தளத்தின் வல்லுனர்களுக்கு தெரியப்படுத்தலாம். அவை பின்னர் கவனமாக ஆராயப்பட்டு உறுதி செய்யப்படும் என தெரிவித்துள்ளது Tomnod.

தேடுதல் பணியில் ஈடுபட இங்கே செல்லுங்கள்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :