சட்பூர்வமாக வைக்கப்பட்ட வீதியின் பெயர் முறைகேடாக மாற்றப்பட்டுள்ளது - அஸாத் சாலி கண்டனம்.


மாவனல்லையில் ஒரு வீதிக்கு அநகாரிக தர்மபால என்ற பெயரை அநாகரிகமான முறையில் சூட்டியூள்ள பொது பல சேனா-  தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான
அஸாத் சாலி கண்டனம்.

மாவனல்லையில் ஒரு வீதிக்கு அநகாரிக தர்மபால என்ற பெயரை அநாகரிகமான முறையில் சூட்டியூள்ள பொது பல சேனா தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான உறுப்பினருமான அஸாத் சாலி கண்டனம்.

பொது பல சேனா அமைப்பினரின் அட்டகாசமும் அராஜகமும் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் அவர்கள் நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டங்கள் பாரம்பரியங்கள் என்பனவற்றை மதிக்காமல் குழப்பத்தை ஏற்படுத்தும் காட்டு மிராண்டிகளாகவே மாறி வருகின்றனர்.

மாவனல்லையில் நீண்டகாலமாக இருந்து வந்த ஹஸன் மாவத்தை என்ற வீதியை அவர்கள் கூட்டமாகச் சென்று அநகாரிக தர்மபால மாவத்தை என்று பெயர் மாற்றியுள்ளதோடு இனி அந்த வீதி அப்படித்தான் அழைக்கப்பட வேண்டும் என்று நடுவீதியில் நின்று பிரகடனமும் செய்துள்ளனர். அநகாரிக தர்மபால என்று பெயர் மாற்ற ஏன் இப்படி அநாகரிகமாக நடந்து கொண்டார்கள்? இவர்களுக்கு உண்மையிலேயே பைத்தியம் முற்றி விட்டதா? அப்படியாயின் இவர்களை சமூகத்தில் நடமாட விடுவது பெரும் ஆபத்தாயிற்றே. உடனடியாக இவர்களை மனநோயளர் மருத்துவ மனைக்கு அனுப்பி அங்கும் சங்கிலி போட்டு கட்டியல்லவா வைக்க வேண்டும்? ஏன் இந்த பித்தர்களை இன்னமும் சமூகத்தில் சுதந்திரமாக நடமாட விட்டுள்ளனர்?

ஒரு வீதியின் பெயரில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டுமானால் அந்தப் பிரதேசத்தின் உள்ளுராட்சி மன்றத்தில் அதற்கான பிரேரணை முன்வைக்கப்பட்டு அது பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட வேண்டும். இது தான் நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் பாரம்பரியம். இவை இரண்டுமே பட்டப்பகலில் கும்பலாகச் சென்று அடாவடித்தனத்தில் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. சட்டத்தையும் பாரம்பரியத்தையும் தெரியாதவர்களை,அவற்றை மதிக்காதவர்களை மனநோயாளிகள் என்று அழைக்காமல் வேறு எப்படி அழைக்கலாம். அவர்கள் எந்த உடையில் இருந்தாலும் சரி அந்த உடைக்கான மதிப்பை மக்கள் வழங்கும் வகையில் அவர்கள் நடந்து கொள்ள வேண்டும். இன்று இந்த நாட்டில் மஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் சென்று பார்த்தால் அன்றாடம் ஆஜராகும் நபர்கள் வரிசையில் காவி உடை தரித்தவர்களுக்கும் பஞ்சமில்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டது.

கொழும்பு வெள்ளவத்தையில் ருத்திரா மாவத்தையை தமிழ் சங்க மாவத்தை என்று பெயர் மாற்ற வேண்டும் என்ற பிரேரணை கொழும்பு மாநகர சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டும் கூட அது இன்னும் நடக்கவில்லை. அப்படியிருக்க நாட்டின் இன்னொரு பகுதியில் கும்பலாகச் சென்று ஒரு மடையர்கள் கூட்டம் எப்படி ஒரு வீதியின் பெயரை மாற்ற முடியும்?

இந்த மாதிரியான இனவாத அடாவடித் தனங்களால் தான் இன்று இந்த நாடு இந்த அளவுக்கு சர்வதேச ரீதியாக அபகீர்த்திக்கு ஆளாகியுள்ளது. சர்வதேச ரீதியாக இந்த நாடு ஓரம்கட்டப்படும் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டுக்கு இந்த அளவு கெட்ட பெயரைக் கொண்டுவந்தும், அபகீர்த்தியை ஏற்படுத்தியும் கூட இவர்களின் இனவெறி ஏன் இன்னும் அடங்கவில்லை. இந்த வெறித்தனத்தை காவல்துறை இன்னமும் வேடிக்கை பார்த்து கொண்டுதான் இருக்கின்றதே தவிர இன்னமும் இவர்களுக்கு எதிராக சட்டம் தன் கடமையை நிறைவேற்றவில்லை.

சட்பூர்வமாக வைக்கப்பட்ட ஒரு வீதியின் பெயரை முறைகேடாக மாற்றுவது அந்த வீதியின் பெயர்ப்பலகைக்கு சேதம் விளைவிப்பது என்பன கூட சட்டப்படி குற்றம் அல்லவா? அப்படியெனில் அந்தக் குற்றத்தை புரிந்த கும்பலுக்கு எதிராக காவல்துறை ஏன் இன்னமும் தன் கடமையை செய்யவில்லை?

இதனால் தான் இந்த நாட்டில் சட்டமும் ஒழுங்கும் முன்னொரு போதும் இல்லாத அளவுக்கு சீர் குலைந்து விட்டது என்று நாம் அடிக்கடி கூறி வருகின்றோம்.

மாவனல்லையில் முஸ்லிம்கள் வாழும் பகுதியில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தை மேல் மாகாண மற்றும் தென் மாகாண முஸ்லிம்கள் மிகக் கவனமாக அவதானித்து தமது வாக்குகளை எதிர்வரும் தேர்தலில் பயன்படுத்த வேண்டும். பொது பல சேனா வேறு அரசு வேறு அல்ல. எல்லாம் ஒன்றுதான். பொது பல சேனா,இராவண சேனா மற்றும் இனவாத அமைப்புக்கள் எல்லாமே அரசாங்கத்தின் கைக் கூலிகள் தான். இல்லையேல் எப்படி இவர்கள் தங்களை உத்தியோகப் பற்றற்ற பொலிஸார் என்று துணிச்சலாக அழைத்துக் கொள்ள முடியும்? இவ்வளவு தணிச்சலாக பட்டப்பகலில் எப்படி சட்டத்தையும் ஒழுங்கையும் மீற முடியும்?

எனவே இந்த அரசாங்கத்தை கவிழ்த்துவதன் மூலம் தான் இந்த இனவாத அமைப்புக்களுக்கும் சாவு மணி அடிக்க முடியும். இந்த அரசுக்கு சாவு மணி அடிக்கப்பட்டால் தான் சட்டம் தன் கடமையை பாரபட்சமின்றி செய்யும். இதை நன்கு கவனத்தில் கொண்டு எமது விழுமியங்களையும், மரபுகளையும் பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு முஸ்லிமும் தனது வாக்கினை இந்த அரசுக்கும் அதன் அடிவருடிகளுக்கும் எதிராக மாகாண சபை தேர்தலில் பயன்படுத்த வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :