பாராளுமன்ற சபாநாயகர் ஆசனத்தில் அமர அஸ்வருக்கு இன்றுமுதல் தற்காலிக தடை



க்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் நாடாளுமன்றத்தின் முதலாசனத்தில் அமர்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை 20-03-2014 இடம்பெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தின் போது சபாநாயகரினால் இந்த தீர்மானம் வெளியிடப்பட்டதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

நாடாளுமன்ற அமர்வுகள் நேற்றைய தினம் ஆரம்பமான போது நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் முதலாசனத்திற்கு வந்த போது எதிர்கட்சியின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டனர்.

இதன்காரணமாக, சபை அமர்வுகள் 15 நிமிடங்கள் வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தன.

ஏற்கனவே கட்சித் தலைவர் கூட்டமொன்றின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வருக்கு முதலாசனத்தில் அமர்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படாது என்று தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :