இன்று இந்த சபையில் 'உலக இளைஞர் மாநாட்டின் வெளியீட்டில் உலகலாவிய அபிவிருத்திக்காக ஏற்படுத்தப்படும் விளைவு - இக்கால இளைஞர் தலைமுறையினரான நீங்கள் நோக்கும் விதம்' என்ற தலைப்பில் உரையாற்றக் கிடைத்தமையிட்டு மிகவும் பெருமைப்படுகின்றேன், மகிழ்ச்சியடைகின்றேன்.
உலகளாவிய ரீதியில் காணப்படுகின்ற இளைஞர்களுடைய பங்கேற்பு, இந் நிகழ்வில் காணப்படுவதனால், அபிவிருத்தியடைந்த நாடுகளில் இருந்து வரும் இளைஞர்களின் ஊடாக, அபிவிருத்த அடைந்து கொண்டிருக்கும் நாடுகள், அபிவிருத்தி அடையாத நாடுகளில் இருக்கும் இளைஞர்கள், அபிவிருத்தியடைந்த நாடுகளில் இருக்கும் இளைஞர்களின் செயற்பாடுகள், இளைஞர்கள் தொடர்பான அபிவிருத்தி திட்டங்கள் போன்ற தகவல்களை பரிமாரிக் கொள்ளக் கூடிய சிறந்த நிகழ்வாக அமைவதனால், இது இளைஞர்களுக்கு அபிவிருத்தி தொடர்பான அறிவை பெருவற்கான சிறந்த இடமாக அமைவதனால், உலக அபிவிருத்திக்கு, இந் நிகழ்வு சிறந்த ஆரம்ப களமாக அமையும் என நம்புகின்றேன்.
உலக அபிவிருத்தியில் இளைஞர்களுடைய பங்களிப்பானது பாரிய தேவையாக உள்ளது. இருப்பினும் இளைஞர்களுக்கு தங்களுடைய உரிமைகள் மற்றும் தங்களுக்கான வழிகாட்டல்கள், சரியான முறையில் கிடைக்காமையாலும், அவை பற்றிய அறிவு இண்மையினாலும், இளைஞர்கள் தவறான வழிகளில் செல்லக் கூடிய நிலைமை காணப்படுவதனால், இவற்றினை நீக்கி இளைஞர்களுக்கான சரியான வழிகாட்டல்களையும், அறிவினையும், சர்வதேச தொடர்புகளையும், உலக அபிவிருத்தி தொடர்பான விடயங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு உலக இளைஞர் மாநாட்டின் ஊடாகவும் மற்றும் 2015 அபிவிருத்தி நிகழ்வின் பிரகாரமும், உலகளாவிய ரீதியில் இளைஞர்கள் செயற்படுவதற்கான வழி ஏற்படுத்தும் என நம்புகின்றோம்.
இன்று உலகளாவிய ரீதியில் இளைஞர்கள் மற்றும் சர்வதேச சமூகம் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளான பால் நிலை சமத்துவம், இளைஞர் வலுவூட்டல் தொடர்பான ஆபத்து நிலைகள், தரமான கல்வியை பெற்றுக் கொள்வதற்கான சமத்துவம் இன்மை, இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்பு, வறுமை ஒழிப்பு, உணவுப் பாதுகாப்பு, சமாதானத்திற்கான எதார்த்தத்தை புரிந்து கொள்கின்ற விதம், இனக்கப்பாடுகள் இன்மை, முரண்பாடுகளை முடிவுக்கு கொண்டு வருதல், விளையாட்டு கலாச்சாரம் தொடர்பான நிச்சயதன்மையையும் மீள் உருவாக்கத்தையும் ஏற்படுத்துதல் போன்றவையானது இன்று, உலகத்திற்கு பாரிய சவாலாக அமைந்திருப்பதனால், இவற்றினை இல்லாமல் செய்து, சர்வதேச சமூகக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு, இவ் உலக இளைஞர் மாநாடு உருதுனையாகவும், சிறந்த ஆரம்பமாகவும் காணப்படுகின்றது
இதே போன்று உலகத்தை அச்சுறுத்தி கொண்டிருக்கின்ற இயற்கை அனர்த்தங்கள், சூழல் மாசடைதல் போன்றவை பற்றி, இம் மாநாட்டில் கலந்துரையாட இருப்பதனால், இவற்றில் இளைஞர்களின் பங்களிப்பானது இன்றியமையாதது. ஏனெனில் கடந்த சுனாமி அனர்த்தத்தின் போது, இலங்கை போன்ற நாடுகள், இது தொடர்பான சிறந்த மனித வளங்கள் இன்மையால், பல்வேறு நாடுகளிடம், இதில் இருந்து மீள்வதற்காகவும், எதிர் காலத்தில் அனர்த்தங்கள் தொடர்பான முன் கூட்டிய தகவல்களை அறிந்த கொள்வதற்கான, தொழில் நுட்ப உதவிகளையும், பல்வேறு நாடுகளிடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. இருப்பினும் 'இன்ஷா அல்லாஹ';, உலக இளைஞர் மாநாட்டின் பின்பு, இவற்றினை தாங்களாகவே செய்து கொள்ளக் கூடிய சக்தி, சர்வதேச ரீதியில், இளைஞர்கள் மத்தியில் ஏற்படும் என நம்புகின்றேன்.
இலங்கையை பொருத்தளவில் 2 கோடி மக்களில், 26 வீதமான, இளைஞர்கள் காணப்படுகின்றனர். இலங்கையை பொறுத்தமட்டில், எமது நாடானது, இளைஞர்களுக்கு பல்வேறுபட்ட வேலைத் திட்டங்களையும், பயிற்சிகளையும், திட்டமிட்ட ரீதியில் நடைமுறைப்படுத்தி வருகின்றது. எடுத்துக் காட்டாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் 12000 கிராமங்களுக்குள், இளைஞர்களை சென்றடையக் கூடிய வகையில், கிராமிய தொழில் பயிற்சி நிலையங்களை அமைத்து, இளைஞர்களை வலுவூட்டல், தகவல் தொழிநுட்ப அறிவை வழங்குதல், தொழில் பயிற்சியினை வழங்குதல் போன்ற சேவையினை வழங்குவதனால், இதே போன்ற சேவைகளை, செய்துவருகின்ற நாடுகளிடமும், இவை பற்றிய தகவல்களை பரிமாரிக் கொள்வதற்கும், எங்களிடம் இருக்கின்ற வளங்களையும், வழிகாட்டல்களையும் வழங்குவதன் ஊடாகவும், உலகளாவிய ரீதியில் இவை பற்றிய தெளிவும், இளைஞர்களுக்கான வழிகாட்டல்களும், சந்தர்ப்பங்களும் கிடைப்பதன் ஊடாக, உலக அபிவிருத்தி மாற்றங்களை, இவ் உலக இளைஞர் மாநாட்டின் ஊடாக ஏற்படுத்த முடியும் என நம்புகின்றேன்.
இம் மாநாட்டில் சர்வதேச ரீதியில் இளைஞர்கள் பங்குபற்றுவதுடன், ஒவ்வொரு நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரச பிரதிநிதிகள், ஐக்கிய நாடுகள் சபையினுடைய பிரதிநிதிகள், கலந்து கொள்வதனால், ஒவ்வொரு நாடுகளும், இளைஞர்களும் எதிர் நோக்கின்ற பிரச்சினைகள், சவால்கள், இளைஞர்கள் மீது காட்டப்படுகின்ற பாரபட்சம் போன்றவற்றை, விழங்கிக் கொள்வதுடன், அவற்றை இல்லா தொழிப்பதற்கான, செயற்பாடுகளை, செயற் திட்டங்களை, உலகளாவிய ரீதியில் வகுக்க கூடிய, ஒரு நிலமை ஏற்படுத்துவதின் ஊடாக, உலக அபிவிருத்திற்கு, இவ் இளைஞர் மாநாடு, ஒரு மைக்கல்லாக அமையும், என எதிர்பார்ப்புகளோடு, இச் சபையில் விடுத்து விடை பெறுகின்றேன்.

0 comments :
Post a Comment