6வயதுடையவரின் நிறையையொத்த இராட்சத குழந்தை : பால் வழங்கியதால் விபரீதம் - படங்கள்




6வயது சிறுவனையொத்த நிறையைக் கொண்ட 8 மாதக் குழந்தையொன்றை கொலம்பியா தொண்டு நிறுவனமொன்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. வல்லேடுபார் நகரைச் சேர்ந்த 434 இறாத்தல் நிறையுடைய சான்றியகோ மென்டோஸா என்ற மேற்படி குழந்தை கொலம்பியாவின் மிகவும் பருமனான குழந்தையாக கருதப்படுகின்றது

இந்நிலையில் தனது குழந்தையின் அளவுக்கதிகமான நிறையால் அச்சமடைந்த அவனது தாயார் எயுனிஸ்பன்டினோ உதவி கோரி மெடெல்லின் நகரை அடிப்படையாக கொண்டு செயற்படும் சபி இருதய மன்றம் என்ற தொண்டு ஸ்தாபனதுக்கு கடிதம் எழுதியதையடுத்து அந்த ஸ்தாபனம் சான்றியகோ மென்டோஸாவை பொறுப்பேற்று அவனது உயிரைக் காப்பாற்றுவதற்கான உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது.

தனது மகன் குறித்து எயுனைஸ் விபரிக்கையில் குழந்தை எப்போதும் அழுத வண்ணமே இருந்ததால் அவன் அழுத போதெல்லாம் அவனுக்கு பாலையும் உணவையும் வழங்கி வந்ததாக தெரிவித்தார்.

இந்நிலையில் அளவுக்கதிகமான நிறை காரணமாக பல்வேறு உடல் நலம் பாதிப்புக்குள்ளான மேற்படி குழந்தை பல தடவைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற நேர்ந்துள்ளது.

சான்றியகோ மென்டோஸாவின் அளவுக்கதிகமான நிறையால் அவனுக்கு நீரிழிவு உயர் இரத்த அழுத்தம் எலும்பு மூட்டுகளில் முறிவு உள்ளடங்களாக உடல் நல பாதிப்புகள் ஏற்படும் அபாயத்தையும் எதிர்கொண்டுள்ளான்.

இந்நிலையில் மேற்படி பாலகனின் உயிரைக் காப்பாற்ற சத்திர சிகிச்சைகள் ஆரோக்கியமான உணவு என்பவற்றை உள்ளடக்கி நீண்ட கால சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக அந்த சிறுவனுக்கு சிகிச்சையளிப்பதில் ஈடுபட்டுள்ள சத்திர சிகிச்சை நிபுணரான செஸர் எர்னெஸ்டோ குயவர் தெரிவித்தார்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :