உலக இருபது20 கிரிக்கெட் தொடரின் பயிற்சிப் போட்டியொன்றில் நியூஸிலாந்து அணியை பாகிஸ்தான் அணி 6 விக்கெட்களால் வென்றது.
மீர்பூர் நகரில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி 9 விக்கெட் இழப்புக்கு 145 ஓட்டங்களைப் பெற்றது. அணித்தலைவர் பிறெண்டன் மெக்கலம் 45 பந்துகளில் 59 ஓட்டங்களைப்பெற்றார்.
பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில் உமர் குல் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
புதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றது.
அணித்தலைவர் மொஹமட் ஹபீஸ் 39 பந்துகளில 55 ஓட்டங்களையும் கம்ரன் அக்மல் 45 பந்துகளில் 52 ஓட்டங்களையும் பெற்றனர்.

0 comments :
Post a Comment