மட்டக்களப்பு மாவட்ட பாரம்பரிய உணவுகளின் கண்காட்சி இம்மாதம் 21ஆம்திகதி முதல் 23ஆம் திகதி வரை மட்டக்களப்பு மகாஜனாக் கல்லூரியில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெறவுள்ளது.
மாவட்டசெயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இக் கண்காட்சியில், தமிழ், முஸ்லிம், சிங்கள, பறங்கியர் சமூகங்களின் பாரம்பரிய உணவுகள் காட்சிப்படுத்தப்படுவதுடன் விற்பனையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் தெரிவித்தார்.
இளம் தலைமுறையினருக்கு பாரம்பரிய உணவுகள் தொடர்பில் அறிவின்மை காணப்படுகிறது இதனால் மேற்கத்தய உணவு வகைகளினைப் பயன்படுத்துவதனால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. பாரம்பரிய உணவுகளைப் பயன்படுத்துவதில் உள்ள நன்மைகள், மேற்கத்தய உணவுகளைப் பயன்படுத்துவதில் உள்ள பாதிப்புக்கள், எமது உணவுகளின் முக்கியத்துவம் என்பவற்றினைத் தெளிவு படுத்தும் வகையில் இந்தக் கண்காட்சி வறிபனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மகாஜனாக் கல்லூரியில் 21ஆம்துpகதி காலை 9 மணிக்கு ஆரம்ப நிகழ:வு நடைபெற்று 23ஆம்திகதி வரை தினமும் காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை இக் கண்காட்சி விற்பனை நடைபெறவுள்ளது.
மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள மக்களின் பாரம்பரிய உணவுகளான முந்திரி வகை, எண்ணைப்பலகாரங்கள், எள்ளு, தயிர், பயத்தை உணவுகள், நெய், தொதள், சீனிப்பலகாரம், சோகி, சோளன், இறுங்கு, இலைக்கஞ்சி, பப்படம், இறுங்கு உணவுகள், தேன்குழல், தானிய வகை, வேடர்களின் உணவுகள், கருவாடு, மாசி, நண்டு என அனைத்து உணவுகளும் இங்கு கிடைக்கக் கூடியதாக இருக்கும்.
எனவே மட்டக்களப்பு மாவட்டத்தின் உணவுக்கண்காட்சி விற்பனையினை அனைத்து மக்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் மலர்ச்செல்வன் மேலும் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment