15ஆம் திகதி காலி - மாத்தறை 30 கி.மீற்றர் கொண்ட அதிவேக பாதை ஜனாதிபதியினால் திறப்பு




அஸ்ரப் ஏ சமத்-
மார்ச் 15ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் காலி - மாத்தறை 30 கி.மீற்றர் கொண்ட அதிவேக பாதை திறந்து வைத்து மக்களிடம் கையளிக்கப்பட உள்ளது.

காலியில் இருந்து மாத்தறைக்குச் செல்வதற்கு பிரதான பாதை வழியாக 1மணித்தியலயமும் 45 நிமிடமும் எடுக்கும் அதிவேகபாதை ஊடாக 20 நிமிடத்தில் செல்லமுடியும். என அமைச்சர் நிர்மாலாவ கொத்தலாவல தெரிவித்தார்.

இவ் அபிவிருத்தி சம்பந்தமாக இன்று (5) தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது அமைச்சர் டலகஸ் அழகப்பெரும, பெருந்தெருக்கள் அபிவிருத்த அமைச்சர் நிர்மலா கொத்தலாவல மற்றும் ஊடக அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.

கொட்டாவையில் இருந்து காலி வரையும் இதுவரை அதிவேக பாதை இருந்து வந்தது எதிர்வரும் மார்ச் 15ஆம் திகதி முதல் மாத்தறை வரை நீடிக்கப்பட்டுள்ளது. காலியில் இருந்து மாத்தறைக்குச் செல்வதற்கு பிரதான பாதை வழியாக 2மணித்தியலாம் எடுக்கும் தற்பொழுது 20 நிமிடத்தில் செல்லமுடியும். இதற்காக 18 பில்லியன் ருபா செலவிடப்பட்டுள்ளது. 

 இவ் வீதியில் 4 இடங்கள் உள்ளக மாறும் இடங்கள் உள்ளன. பெரிய பாலங்கள் 8, மேலும் 234 சிறுபாலங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி, சீன முதலீட்டு நிறுவனம், யப்பாணின் ஜயிக்கா மற்றும் ;இலங்கை அரசு ஆகியன நிதிஉதவி வழங்கியுள்ளன.

மேலும் மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமாண நிலையம் வறை இவ் அதிவேக பாதை விஸ்தரிக்கப்பட உள்ளது.
அத்துடன் கடுவெல கொட்டாவ அதிவேக பாதையும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. கொட்டாவையில் இருந்து கடுவலைக்கு 10 நிமிடங்களில் பயணிகக் முடியும். இவ் வழியாக கட்டுநாயக்க செல்லக்கூடிய வகையில் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. மேலும் மாலபே அத்துருக்கிரிய பாதை அடுத்த6 மாத காலத்திற்குள் திறந்து வைக்கப்படும்.

மார்ச 8,9 10ஆம் திகதில் பொதுமக்களது பார்வைக்காக திறந்து விடப்படும், அத்துடன் இத் திணங்களில் துவிச்சங்கர வண்டி ஓட்டப்போட்டி, நடைபவணி போட்டி, அங்கவீணர்களுக்காக ஓட்டப்போட்டி ஆகியனவும் நடைபெறும். ஆத்துடன் சகல கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கான கயிரு இழுத்தல் போட்டிகளும் நடைபெறும். ஏன அமைச்சர் டலகஸ்அழகப்பெரும தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :