வடக்கு மாகாண சபையை உடனடியாக கலைக்க வேண்டும் -என்று ஜாதிக ஹெல

டக்கு மாகாண சபையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் நாட்டை முற்றுமுழுதாக அழிக்கும் வல்லமை கொண்டவை.

எனவே, அரசாங்கம் வடக்கு மாகாண சபையை உடனடியாக கலைக்க வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய வலியுறுத்தியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுத்துவந்த தனிநாட்டுக் கோரிக்கையை வடக்கு மாகாண சபை தற்போது முன்னெடுத்துச் செல்கின்றது. இரத்தம் சிந்தாமல் சர்வதேச உதவியோடு நாட்டைக் கூறுபோடும் திட்டமே அதுவென்றும் அந்தக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான பௌத்த பிக்குகள் தலைமை வகிக்கும் ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகவியலாளர் சந்திப்பொன்று கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. அதில், கருத்துரைக்கும் போதே அந்தக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான உதய கம்மன்வில்ல மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபை தனிநாடு என்ற கோட்பாட்டோடு செயற்படுகின்றது. மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்கள் குறித்து கவலை கொள்வதில்லை. மாறாக, சர்வாதிகார போக்கில் செயற்படுகிறது. வடக்கு மாகாண சபை அண்மையில் நிறைவேற்றிய தீர்மானங்களில் குறிப்பிட்டப்பட்டுள்ள 12 விடயங்களும் நாட்டை அழிக்க வல்லவை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :