கணவனின் அன்பைப்பெற ஹாலிவுட் நடிகை போன்று தன்னை மாற்றிய சவூதிப்பெண் வாழ்க்கை இளந்த சோகம்

ணவனை கவர்வதற்காக பிரபல ஹாலிவுட் நடிகை கிம் கர்டஷியான் போல் மாற நினைத்து, எதிர்வினையாக கணவனால் விவாகரத்து செய்யப்பட்ட சவுதி அரேபியாவை சேர்ந்த பெண்ணின் கதை தற்போது அந்நாட்டு ஊடகங்களின் பரபரப்பான விவாதப் பொருளாக மாறியுள்ளது.

பெயர் வெளியிடப்படாத அந்தப் பெண்ணின் கணவர், பிரபல ஹாலிவுட் நடிகை கிம் கர்டஷியானின் வெறித்தனமான ரசிகராக இருந்து வந்துள்ளார். அவர் நடித்த படங்களை தொடர்ந்து வீடியோவில் போட்டுப் பார்த்து புளகாங்கிதம் அடைந்து வந்த கணவனின் போக்கை மாற்ற அவரது மனைவி ஒரு முடிவெடுத்தார்.

முதலில், நடிகை கிம் கர்டஷியான் பாணியில் சிகையலங்காரம் செய்துக் கொண்டார். நடிகையின் மீது தனது கணவனுக்கு உள்ள ஈர்ப்பு தன் மீது இல்லாமல் போனதை அறிந்து வேதனைப்பட்ட அந்த பெண், சவுதியின் பிரபல ‘பிளாஸ்டிக் சர்ஜரி’ நிபுணரிடம் சென்று தனது முக அமைப்பையும் கிம் கர்டஷியானைப் போலவே மாற்றிக் கொண்டார்.

'நடிகையை மறந்துவிட்டு இனி நம் மீது மட்டும் கணவர் பூரணமாக அன்பு செலுத்துவார்’ என்ற நம்பிக்கையுடன் வீடு திரும்பிய அவருக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது. மனைவியின் செய்கையும் (புதிய) முக அமைப்பும் தனக்கு பிடிக்கவில்லை என்று குற்றம்சாட்டி, அவரை விவாகரத்து செய்துவிட்ட கணவன் இரண்டாவதாக வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

கணவனுக்காக இவ்வளவு தியாகங்களை செய்த அந்த பெண்ணின் எண்ணம் பலிக்காமல் போனது மட்டுமின்றி ‘பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த’ அவரது வாழ்க்கை ஊடகங்களின் விவாதப் பொருளாகவும் மாறிவிட்டதை எண்ணி பல சவுதி பெண்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :