ஏ.எல்.ஜனூவர்-
நமது வாழ்க்கையில் இளைஞர் பருவம் என்பது மிகவும் முக்கியமான பருவமாகும். நாம் வாழும் சமூகத்தோடு ஒன்றிணைந்து மக்களுக்காக நல்ல பணிகளை நமது வாழ்நாளில் மறந்து விட முடியாது. இளைஞர் பருவம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மாத்திரம் தான் இருக்கும். நாளைய தலைவர்களான நமது இளைஞர்கள் பிரதேச, மாவட்ட, மாகாண மட்டத்தில் இன ஐக்கியத்தை ஏற்படுத்துபவர்களாகவும், நாட்டுப்பற்றுள்ளவர்களாகவும் செயற்படுவதுடன் நமது பிரதேசங்களில் நடைபெறும் உண்மைக்கு உண்மையான யதார்த்தங்களை அடிமட்ட மக்கள் மத்தியில் வெளிக்கொண்டு வருபவர்களாகவும் செயற்பட வேண்டுமென தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
பொத்துவில் பிரதேசத்திலுள்ள 12 விளையாட்டுக் கழகங்களுக்கு சீருடை வழங்கும் வைபவம் பொத்துவில் பிரதேச தேசிய காங்கிரஸின் விளையாட்டுக் கழகங்களின்; சம்மேளனத் தலைவர் எம்.எம்.முஸ்தபா தலைமையில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இளைஞர்களாக வாழும் நாம் நமது நாற்பது வயதுக்குட்பட்ட காலத்தில் நமது சமூகத்தினருக்காக நல்ல பணிகளை புரிந்து சமூகத்தின் மத்தியில் நன்மதிப்பைப் பெறவேண்டும். நமது சமூகம் 40 வயதுக்குள் ஒரு மனிதனை அடையாளங்கண்டு அவரின் செயற்பாட்டுக்குரிய பெயர்களை சூட்டிவிடும். எனவே, நாங்கள் நல்ல பணிகளை புரிய வேண்டும். இளைஞர்கள் எப்போதும் விசுவாசம் உள்ளவர்களாக செயற்பட்டு விசுவாசத்தினை வெளிக்காட்டுவதன் ஊடாக நமது சமூகத்தின் நாளைய தலைவர்களாக வருவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும். கடந்த 1977 ம் ஆண்டு தொடக்கம் 1994 ம் ஆண்டு வரை 17 வருடங்கள் ஐக்கிய தேசியக் கட்சி நமது நாட்டில் ஆட்சியிலிருந்தது.
இக்கால கட்டத்தில் தான் மறைந்த பெருந் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் முஸ்லிம்களுக்கென்று முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியை உருவாக்கினார். முஸ்லிம் காங்கிரஸின் இதயமான அம்பாறை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தலைவர் அஷ்ரப் அவர்களுடன் ஒள்றிணைந்து முஸ்லிம் காங்கிரஸின் கொள்கைகளையும், குரல்களையும் பரப்புவதற்கு உரமாக செயற்பட்டனர் எமது இளைஞர் பருவத்தினை நமது பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களின் அரசியல் கனவை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் தியாகம் செய்துதான் முஸ்லிம் காங்கிரஸை வளர்த்தோம்.
அப்போது ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில்; இருந்த அமைச்சர்கள், பாதுகாப்பு படையினர், அதிகாரிகள், முஸ்லிம் காங்கிரஸின் கொள்கைகளையும், குரல்களையும் பரப்புவதற்கு தடையாக இருந்தனர். அவ்வேளையில் தலைவர் அஷ்ரபுடன் இணைந்து விசுவாசத்துடன் இளைஞர்கள் செயற்பட்டோம். அன்று தலைவர் அஷ்ரப் அவர்களுடன் இணைந்து உண்மைக்கு உண்மையாக செயற்பட்ட பல முக்கியஸ்தர்கள் இன்று கொள்கை ரீதியில் வௌ;வேறு கட்சியில் இருந்தாலும் எல்லோரும் முக்கிய பதவிகளில் உள்ளனர்.

உண்மையில் தலைவர் அஷ்ரப் அவர்களுடனும், தலைவர் அதாஉல்லா அவர்களுடனும் விசுவாசமாக இயங்கியதனால்தான் இவ்வாறான பதவி எனக்கு கிடைத்துள்ளது என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உள்ளது. தலைவர் அஷ்ரப் அவர்கள் முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கியதிலிருந்து அவருக்கு விசுவாசமாகவும், பக்க பலமாகவும் இருந்து செயற்பட்டோம்.
தலைவர் அஸ்ரப் அவர்களின் மரணத்திற்கு பின்பு எதிர்பாராத விதமாக இணைத்தலைவர்களான அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களும், அமைச்சர் பேரியல் அஷ்ரப் அவர்களும் செயற்பட்ட காலத்தில்; அமைச்சர் அதாவுல்லா அவர்களும், முஸ்லிம் காங்கிரஸின் போராளிகளும் ஒன்றினைந்து முஸ்லிம் காங்கிரஸிற்கு பெண் தலைமைத்துவம் ஒருபோதும் சரிவராது. எனவே, ரவூப் ஹக்கீம் அவர்களை கட்சியின் தலைவராக சாய்ந்தமருதில் பிரகடனம் செய்தோம்.

காலப்போக்கில் முஸ்லிம் காங்கிரஸினுடைய தலைவர் ரவூப் ஹக்கிமின் செயற்பாட்டில் முஸ்லிம் சமூகத்தின் விடுதலை தொடர்பான கொள்கைகளில் முரண்பாடுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து அமைச்சர் அதாஉல்லாவும், கட்சிப் பிரமுகர்களும்; முஸ்லிம் காங்கிரஸிலிருந்து வெளிப்படையாக வெளியேறி தலைவர் அஸ்ரபின் கொள்கைகளை முடிந்தளவு முன்னெடுப்பதற்கு தேசிய காங்கிரஸ் என்ற புதிய கட்சியை உருவாக்கி அக் கட்சியின் தலைமைத்துவத்தினுடாக நமது நாட்டில் குறிப்பாக வட கிழக்கு மாகாணத்தில் இன்று ஏற்படுத்தப்பட்டுள்ள சமாதானத்திற்கு வித்திட்டிருப்பது வரலாற்று நிகழ்வாகும்.
தேசிய காங்கிரஸ் ஒருபோதும் அரசியலுக்காக, வாக்குகளுக்காக தேர்தல் காலங்களில் பொய் வாக்;குறுதிகள் வழங்குவதில்லை. எங்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைத்த போதெல்லாம் மூவின மக்களுக்கும், அரசியல் அநாதரவான பிரதேசங்களில் மக்களுக்கும் நல்ல பணிகளை புரிந்து வருகின்றோம்.
பொத்துவில் பிரதேசத்தின் இளைஞர்கள் ஐக்கியத்துடன் ஒன்றினைந்து பொத்துவில் பிரதேச மக்களுக்கு எதிர்காலத்தில் நல்லவைகள் கிடைக்கின்ற வழிகளை அடையாளங்கண்டு செயற்பட வேண்டும் தேர்தல் காலத்தில் மாத்திரம் இப்பிரதேசத்திற்கு வருகை தந்து எமது மக்களின் உணர்வுகளை உசுப்பி சூடேற்றி பிரதேச வாதங்களை உருவாக்கி ஐக்கியமாக வாழ்ந்து வரும் நமது முஸ்லிம் பிரதேசங்கள் ஒன்றோடு ஒன்றை மோதவிட்டு அரசியல் செய்கின்றவர்களை இளைஞர்களான நீங்கள்; முன்கூட்டியே அடையாளங்கண்டு மக்களுக்கு இப்போதிருந்த விளக்கமளிக்க வேண்டிய பாரிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது.
நாளைய தலைவர்களான இளைஞர்கள் நன்கு உணர்ந்து செயற்பட வேண்டும். இளைஞர்கள் ஒன்றிணைந்து செயற்படும் போது பல இன்னல்கள் ஏற்படும். அவைகளை முடிந்தளவு எதிர்த்து போராட சந்தர்ப்பங்களை உருவாக்கி வெற்றி அடைவதில்தான் நாளைய தலைமுறையினருக்கு அனுபவங்கள், அறிவாற்றல் ஏற்படும். இவைகளை நாம் பயனுள்ள வகையில் பயன்படுத்தி சிறந்த பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment