எம்.பைஷல் இஸ்மாயில்-
இந்தியா கோவாவில் நடைபெற்ற லுசிபோனியா விளையாட்டுப் போட்டியில் மெய்வல்லுனர் நிகழ்ச்சியில் 4X100 மீற்றர் அஞ்சல் ஓட்டக் குழுவில் பங்குபற்றி தங்கப் பதக்கம் வென்று தாய் நாட்டிற்கும் அம்பாறை மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்துத் தந்த ஏ.எல்.எம்.அஷ்ரபிற்கு தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், அம்பாறை மாவட்ட பொதுப் பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ்.எல்.முனாஸ் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அம்பாறை மாவட்ட பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஏ.எல்.எம்.அஷ்ரப் இன்று முழு கிழக்கு மாகாணத்திற்கு மட்டுமல்ல அம்பாறை மாவட்டத்துக்கும் அவரது பொத்துவில் மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார். அண்மைக்காலமாக கிழக்கு மாகாணத்தில் அதிலும் அம்பாறை மாவட்டத்தில் விளையாட்டுத்துறையில் பாரிய முன்னேற்றத்தைக் கண்டுவரும் இன்றைய விளையாட்டு வீரர்கள் பல தேவைகள் உள்ளவர்களாகவும், போதியளவு வளங்கள் அற்றவர்களாகவும் இல்லாத நிலையிலேயே இன்று தேசிய ரீதியில் பல புகழ்களைச் சேர்த்து வருகின்றனர்.
குறுந்தூர ஒட்ட வீரன் அஷ்ரப் கிழக்கின் முடிவிடம் பொத்துவிலை சர்வதேச ரீதியில் தடம் பதித்துள்ளார். தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன் படுத்தி தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார். தேசிய விளையாட்டு விழாவில் இம்முறை 100 மீற்றர் ஓட்டத்தில் மூன்றாமிடம் பெற்ற அஷ்ரப் 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாடசாலைகள் விளையாட்டு விழாவிலும் 100 மீற்றர் ஓட்டத்திலும் மூன்றாமிடம் பெற்றிருந்தார்.
கிழக்கு மாகாண விளையாட்டு விழா தேசிய இளைஞர் விளையாட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் பதக்கங்களை பெற்ற அஷ்ரப் இன்று இலங்கை இராணுவத்தில் இணைந்து பயிற்சிகளைப் பெற்றதுதான் அவரது வெற்றிக்கு பிரதானமான காரணமாக அமைந்துள்ளது.
எப்போதும் வெற்றியையும், தோல்வியையும் சமமாக ஏற்றுக்கொள்ளும் அஷ்ரபின் வெற்றி எமக்கு மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒலுவில் ஆர்.எம்.றஜாஸ் கான் 200 மீற்றர் ஓட்டத்தில் முதலாமிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றிருந்ததோடு சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஒருவர் தேசிய விளையாட்டு விழாவில் தங்கப்பதக்கம் பெற்றது ஒரு சாதணையாகும்.
அதுமட்டுமல்ல றஜாஸ்கான் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேசப் போட்டியில் தனிநபர் 200 மீற்றர் ஓட்டப்போட்டியில் இரண்டாமிடம் பெற்று வெள்ளிப்பதக்கம் பெற்றிருந்தார். இதுதான் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஒருவர் சர்வதேச போட்டி ஒன்றில் இலங்கைக்காக பெற்ற முதல் பதக்கமாகும்.
அவரைப்போன்று அட்டாளைச்சேனை மண்ணின் மைந்தன் எம்.ஐ.எம்.மிப்ரான் தேசிய ரீதியில் நீளம் பாய்தல் நிகழ்ச்சியில் பிரகாசித்து வருகின்றார். அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.எம்.றஜாஸ்கான், ஏ.எல்.எம்.அஷ்ரப், எம்.ஐ.எம்.மிப்ரான் இந்த மூன்று மெய்வல்லுனர் வீரர்களும் சமகாலத்தில் தேசிய ரீதியில் சாதனை வீரர்களாக மிளிர்ந்து வருகின்றனர்.
மெய்வல்லுனர் துறைக்கு அப்பால் கிரிக்கெட் துறையில் நிந்தவூரைச் சேர்ந்த கொழும்பு சாகிறாக் கல்லூரி வீரர் நிக்ஸி அஹமட் சகலதுறை கிரிக்கெட் வீரராக அகில இலங்கை ரீதியாக முதன்மையான வீரராக பிராசித்து வருகின்றார்.
அம்பாறை மாவட்டத்தில் விளையாட்டுத்துறைக்கான போதிய வளங்களும் வசதிகளுமற்ற நிலையில் தனது முயற்சியினால் தங்கப் பதக்கம் வென்று உண்மையில் விளையாட்டுத்துறையில் பாரிய தேவைகள் எதிர்பார்ப்புக்களுடன் உள்ள அம்பாரை மாவட்டத்தில் போதிய வளங்களுடன் ஒரு மைதானம்கூட இல்லாத நிலையில் தேசிய ரீதியில் புகழ் பெறுமளவிற்கு அஷ்ரப் திறமையை வெளிக்காட்டியிருப்பது மெச்சத்தக்கதாகும்.
அம்பாறை மாவட்டத்தின் வரலாற்றில் சர்வதேச போட்டியில் ஒருவர் அஞ்சல் ஓட்டப்போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றது இதுவே முதல்தடவையாகும். இதன் மூலம் ஏனையவர்களும் இவ்வாறான தேசிய மட்ட, சர்வதேச மட்டப் போட்டிகளில் பங்குபற்ற வேண்டும் என்ற ஆர்வத்தை அஷ்ரப் எமது மாவட்ட விளையாட்டு வீரர்கள் மத்தியில் விதைத்து விட்டார்.
அஷ்ரபின் வெற்றியில் அன்று முதல் இன்று வரை பங்களிப்புச் செய்து அவரை ஊக்குவித்து வரும் அவரது பெற்றோர்கள், பாடசாலை பயிற்சியாளர், தற்போதைய பயிற்சியாளர், விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள், நண்பர்கள் ஆகியோர்களுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
விளையாட்டுத்துறை செய்தியாளர் நண்பர் எஸ்.எம்.அறூஸ் அவர்கள் அஷ்ரபை முதன் முதலாக ஊடகங்களில் வெளிக்காட்டியதை இந்த சந்தர்ப்பத்தில் ஞாபகப்படுத்திப் பார்க்கின்றேன். அவர் எழுதிய கட்டுரையில் பொத்துவில் மண்ணின் மைந்தன் அஷ்ரப் சர்வதேச ரீதியில் நிச்சயம் பிரகாசிப்பார் என சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் எழுதியிருந்தார். அதுமட்டுமல்ல அஷ்ரப் ஒரு திறமையானவர் அவருக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கின்றது எனவும் அறூஸ் என்னிடம் கதைக்கின்றபோது கூறுவார்.
அந்த வகையில் சாதனை வீரன் அஷ்ரபை அட்டாளைச்சேனை லக்கி விளையாட்டுக்கழகம் பாராட்டி கௌரவிக்க தீர்மானித்துள்ளதையும் இந்த சந்தர்ப்பத்தில் நினைவூட்ட விரும்புகின்றேன்.
எதிர்காலத்தில் தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் இன்னும் பல வெற்றிகளைப்பெற்று இலங்கைத் தாய் நாட்டுக்கும், கிழக்கு மாகாணத்துக்கும் அஷ்ரப் பெருமை சேர்க்கவேண்டுமென வாழ்த்துகின்றேன். அத்தோடு அஷ்ரபின் வெற்றியை கௌரவித்து அவருக்கு உதவிகளையும் அணுசரனைகளையும் வழங்குவதற்கு நமது பிரதேச முக்கியஸ்தர்கள், வர்த்தகர்கள் முன்வரவேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றேன் என்று அவரது வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அம்பாறை மாவட்ட பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஏ.எல்.எம்.அஷ்ரப் இன்று முழு கிழக்கு மாகாணத்திற்கு மட்டுமல்ல அம்பாறை மாவட்டத்துக்கும் அவரது பொத்துவில் மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார். அண்மைக்காலமாக கிழக்கு மாகாணத்தில் அதிலும் அம்பாறை மாவட்டத்தில் விளையாட்டுத்துறையில் பாரிய முன்னேற்றத்தைக் கண்டுவரும் இன்றைய விளையாட்டு வீரர்கள் பல தேவைகள் உள்ளவர்களாகவும், போதியளவு வளங்கள் அற்றவர்களாகவும் இல்லாத நிலையிலேயே இன்று தேசிய ரீதியில் பல புகழ்களைச் சேர்த்து வருகின்றனர்.
குறுந்தூர ஒட்ட வீரன் அஷ்ரப் கிழக்கின் முடிவிடம் பொத்துவிலை சர்வதேச ரீதியில் தடம் பதித்துள்ளார். தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன் படுத்தி தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார். தேசிய விளையாட்டு விழாவில் இம்முறை 100 மீற்றர் ஓட்டத்தில் மூன்றாமிடம் பெற்ற அஷ்ரப் 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாடசாலைகள் விளையாட்டு விழாவிலும் 100 மீற்றர் ஓட்டத்திலும் மூன்றாமிடம் பெற்றிருந்தார்.
கிழக்கு மாகாண விளையாட்டு விழா தேசிய இளைஞர் விளையாட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் பதக்கங்களை பெற்ற அஷ்ரப் இன்று இலங்கை இராணுவத்தில் இணைந்து பயிற்சிகளைப் பெற்றதுதான் அவரது வெற்றிக்கு பிரதானமான காரணமாக அமைந்துள்ளது.
எப்போதும் வெற்றியையும், தோல்வியையும் சமமாக ஏற்றுக்கொள்ளும் அஷ்ரபின் வெற்றி எமக்கு மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒலுவில் ஆர்.எம்.றஜாஸ் கான் 200 மீற்றர் ஓட்டத்தில் முதலாமிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றிருந்ததோடு சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஒருவர் தேசிய விளையாட்டு விழாவில் தங்கப்பதக்கம் பெற்றது ஒரு சாதணையாகும்.அதுமட்டுமல்ல றஜாஸ்கான் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேசப் போட்டியில் தனிநபர் 200 மீற்றர் ஓட்டப்போட்டியில் இரண்டாமிடம் பெற்று வெள்ளிப்பதக்கம் பெற்றிருந்தார். இதுதான் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஒருவர் சர்வதேச போட்டி ஒன்றில் இலங்கைக்காக பெற்ற முதல் பதக்கமாகும்.
அவரைப்போன்று அட்டாளைச்சேனை மண்ணின் மைந்தன் எம்.ஐ.எம்.மிப்ரான் தேசிய ரீதியில் நீளம் பாய்தல் நிகழ்ச்சியில் பிரகாசித்து வருகின்றார். அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.எம்.றஜாஸ்கான், ஏ.எல்.எம்.அஷ்ரப், எம்.ஐ.எம்.மிப்ரான் இந்த மூன்று மெய்வல்லுனர் வீரர்களும் சமகாலத்தில் தேசிய ரீதியில் சாதனை வீரர்களாக மிளிர்ந்து வருகின்றனர்.
மெய்வல்லுனர் துறைக்கு அப்பால் கிரிக்கெட் துறையில் நிந்தவூரைச் சேர்ந்த கொழும்பு சாகிறாக் கல்லூரி வீரர் நிக்ஸி அஹமட் சகலதுறை கிரிக்கெட் வீரராக அகில இலங்கை ரீதியாக முதன்மையான வீரராக பிராசித்து வருகின்றார்.
அம்பாறை மாவட்டத்தில் விளையாட்டுத்துறைக்கான போதிய வளங்களும் வசதிகளுமற்ற நிலையில் தனது முயற்சியினால் தங்கப் பதக்கம் வென்று உண்மையில் விளையாட்டுத்துறையில் பாரிய தேவைகள் எதிர்பார்ப்புக்களுடன் உள்ள அம்பாரை மாவட்டத்தில் போதிய வளங்களுடன் ஒரு மைதானம்கூட இல்லாத நிலையில் தேசிய ரீதியில் புகழ் பெறுமளவிற்கு அஷ்ரப் திறமையை வெளிக்காட்டியிருப்பது மெச்சத்தக்கதாகும்.அம்பாறை மாவட்டத்தின் வரலாற்றில் சர்வதேச போட்டியில் ஒருவர் அஞ்சல் ஓட்டப்போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றது இதுவே முதல்தடவையாகும். இதன் மூலம் ஏனையவர்களும் இவ்வாறான தேசிய மட்ட, சர்வதேச மட்டப் போட்டிகளில் பங்குபற்ற வேண்டும் என்ற ஆர்வத்தை அஷ்ரப் எமது மாவட்ட விளையாட்டு வீரர்கள் மத்தியில் விதைத்து விட்டார்.
அஷ்ரபின் வெற்றியில் அன்று முதல் இன்று வரை பங்களிப்புச் செய்து அவரை ஊக்குவித்து வரும் அவரது பெற்றோர்கள், பாடசாலை பயிற்சியாளர், தற்போதைய பயிற்சியாளர், விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள், நண்பர்கள் ஆகியோர்களுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.விளையாட்டுத்துறை செய்தியாளர் நண்பர் எஸ்.எம்.அறூஸ் அவர்கள் அஷ்ரபை முதன் முதலாக ஊடகங்களில் வெளிக்காட்டியதை இந்த சந்தர்ப்பத்தில் ஞாபகப்படுத்திப் பார்க்கின்றேன். அவர் எழுதிய கட்டுரையில் பொத்துவில் மண்ணின் மைந்தன் அஷ்ரப் சர்வதேச ரீதியில் நிச்சயம் பிரகாசிப்பார் என சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் எழுதியிருந்தார். அதுமட்டுமல்ல அஷ்ரப் ஒரு திறமையானவர் அவருக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கின்றது எனவும் அறூஸ் என்னிடம் கதைக்கின்றபோது கூறுவார்.
அந்த வகையில் சாதனை வீரன் அஷ்ரபை அட்டாளைச்சேனை லக்கி விளையாட்டுக்கழகம் பாராட்டி கௌரவிக்க தீர்மானித்துள்ளதையும் இந்த சந்தர்ப்பத்தில் நினைவூட்ட விரும்புகின்றேன்.
எதிர்காலத்தில் தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் இன்னும் பல வெற்றிகளைப்பெற்று இலங்கைத் தாய் நாட்டுக்கும், கிழக்கு மாகாணத்துக்கும் அஷ்ரப் பெருமை சேர்க்கவேண்டுமென வாழ்த்துகின்றேன். அத்தோடு அஷ்ரபின் வெற்றியை கௌரவித்து அவருக்கு உதவிகளையும் அணுசரனைகளையும் வழங்குவதற்கு நமது பிரதேச முக்கியஸ்தர்கள், வர்த்தகர்கள் முன்வரவேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றேன் என்று அவரது வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment