பெங்களூரை சேர்ந்த வினோத் என்பவரது மனைவி ரம்யா நேற்று விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்த போது இறந்து விட்டார். அவரைப்பற்றி உருக்கமான தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாராசூட்டில் இருந்து குதித்து சாகசம் செய்ய வேண்டும் என்று ரம்யா விரும்பினார். இதையடுத்து கணவர் வினோத்துடன் அவர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரம்யா மற்றும் அவரது கணவர் வினோத் ஆகியோர் தலா ரூ. 7 ஆயிரம் செலுத்தி 3 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து சாகசம் செய்துள்ளனர்.
விமானத்தில் இருந்து குதித்த இந்த தம்பதிகள் உயரமான இடத்தில் இருந்து குதிக்க வேண்டும் என்று முடிவு செய்து அதற்காக தலா ரூ. 40 ஆயிரம் பணம் செலுத்தி விண்ணப்பித்தனர். முதலில் ரம்யா குதித்தவுடன் அடுத்ததாக வினோத் குதிக்க தயாராக இருந்தார்.
அப்போது விமானம் 10 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த போது ரம்யாவை குதிக்க சொல்லி அவருடன் 2 பயிற்சியாளர்களும் குதித்தனர். அப்போது சில நொடிகளில் ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் வந்த ரம்யா 3 ஆயிரம் அடி கடந்தவுடன் தனது கட்டுப்பாட்டில் உள்ள பாராசூட்டை இயக்க வேண்டும். ஆனால் புதியதாக குதித்த ரம்யாவிற்கு பதற்றம் ஏற்பட்டு காலதாமதமாக பாராசூட்டை இயக்கியுள்ளார். இதனால் இடது பக்க பட்டனை அழுத்திய ரம்யா வலது பக்க பட்டனை இயக்காததால் பாராசூட் சரியாக இயங்காமல் வேகமாக கீழே வந்தது. வானத்தில் இருந்து 10 முறைக்கு மேல் சுழன்று வந்த ரம்யா விமான நிலையம் அருகில் உள்ள விவசாய தோட்டத்தில் விழுந்து இறந்து விட்டது தெரியவந்தது.

மாலைமலர்.

0 comments :
Post a Comment