‘சிங்கம் 2’ படத்துக்கு பின் கவுதம்மேனன் இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால் பல மாதங்கள் காத்து இருந்தும் கதையை தனக்கு பிடித்தமாதிரி தயார் செய்யவில்லை என்று கூறி அப்படத்தில் இருந்து சூர்யா விலகினார். அட்வான்ஸ் பணத்தையும் திருப்பி கொடுத்தார்.
அந்த படத்துக்கு பதிலாக தற்போது லிங்குசாமி இயக்கி தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார்.
படப்பிடிப்பு முழு வீச்சில் நடக்கிறது. முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் கோவாவில் துவங்குகிறது.
இதில் சூர்யா ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இந்தி நடிகர்கள் மனோஜ் பாஜ்பாய், வித்யூத் ஜாம்வெஸ், ராஜ்பல் யாதவ், திலீப் தஹில் ஆகியோரும் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர்.
இந்தி நடிகை சோனாக்சி சின்ஹா குத்துப்பாடல் ஒன்றுக்கு சூர்யாவுடன் நடனம் ஆடுகிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்த படத்துக்கு பெயர் வைக்காமலேயே படப்பிடிப்புகள் நடந்து வந்தன. இன்னொரு புறம் பெயர் தேர்விலும் லிங்குசாமி தீவிரமாக ஈடுபட்டார். தற்போது ‘அஞ்சான்’ என்ற பெயரை தேர்வு செய்து படத்துக்கு சூட்டியுள்ளார். இந்த பெயரை பொங்கல் பண்டிகையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். வருகிற கோடையில் இப்படம் ரிலீசாகிறது.

0 comments :
Post a Comment