2 கோடி ரூபாவுக்கு மேற் பட்ட நிதியில் நிர்மாணிக்கப்பட்ட கணினி அறை திறப்பு விழா - படங்கள்

இக்பால் அலி-
ரு சமூகம் எழுச்சி பெற வேண்டுமெனில் அது மூன்று விவகாரங்களிலே கவனம் செலுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. அதில் ஒன்று கல்வி. இரண்டாவது கலாச்சாரம் மூன்றாவதாகப் பொருளாதாரம். இந்த மூன்று விவகாரங்களில் எந்த சமூகம் உச்ச நிலையில் இருக்கின்றதோ அந்த சமூகமே மிகவும் உயர்ந்த நிலையில் இருப்பதை நாங்கள் பார்க்கின்றோம். என்று ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுத் தலைவர் அஷஷய் முஹம்மது அபூபக்கர் சித்தீக் மதனி தெரிவித்தார்.

குவைட்டு நாட்டு பைத்துல் ஸகாத் நிறுவனத்தின் அனுசரணையுடன் ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவினால் பறகஹதெனிய தாரூத் தவ்ஹீத் அஸ்ஸலாபிய்யா கல்வி நிலையத்தில் இரண்டு கோடி ரூபாவுக்கு மேற் பட்ட நிதியில் நிர்மாணிக்கப்பட்ட கணினி தகவல் தொழில் நுட்ப கட்டிட நிலையத்தின் திறப்பு விழாவின் போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுத் தலைவர் அஷஷயக்; முஹம்மது அபூபக்கர் சித்தீக் மதனி அங்கு இவ்வாறு இதனைக் குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்

நபி முஹம்மது (ஸல்) அவர்களுடைய வழிகாட்டல்கள் இந்த மூன்று அடிப்படையிலேயே இருந்தது. நபி (ஸல்) அவர்கள் உலகத்திற்கு அனுப்பட்ட போது அப்போதைய சமூகம் அறியாமைக் காலத்திலேயே இருந்தது. அவர்களிடத்தில் கலாச்சாரம் ஒன்று இருக்க வில்லை. பொருளாதாரத்திலும் அவர்கள் வீழ்ச்சியாகத்தான் இருந்தார்கள். அவர்களிடத்திலே பிரிவும் பிளவும் சண்டையும் சச்சரவும்தான் அவர்களிடத்திலே குடிகொண்டிருந்தன. 

இவ்வாறான சமூகத்திலேதான் நபி நாயகம் (ஸல்) அவர்கள ;தூதராக அனுப்பப்ட்டு கல்வியின் முக்கியத்தவத்தை உயர்த்தினார்கள். அவர்களுக்கு அருளப்பட்ட முதல் குர்ஆன் வாக்கியமே கல்வியின் முக்கியத்துவத்தை வழியிறுத்தியே கூறப்பட்டுள்ளது. அறிவிலே உயர்ந்தவர்களாக திறமைசாலிகளாக மாற்றிய வரலாறு கொண்வர்களாக ரஸுல் (ஸல்) அவர்கள் விளங்கினார்கள். அதே போன்று இஸ்லாம் என்ற தீனைக் கொடுத்து அதில் சிறந்த கலாசாரத்தை உருவாக்கி அந்த சமுதாயத்தை உயர்ந்த சமுதாயமாக மாற்றினார்கள்.

அக்கால சமூகத்தினர்கள் பொருளாதாரத்தில் வீழ்ச்சி கண்டிருந்தார்கள். சொல்லொண்ணாத் துயரங்களைக் கொண்டு வாழ்ந்துள்ளனர். ஒரு நேரம் சாப்பிட்டால் மறு நேரம் சாப்பிடுவதற்கு வழியின்றி தவிப்பார்கள். ஒரு ஆடை அணிந்தால் மறு ஆடை ஆணிய முடியுமா என்று ஏங்கிக் கொண்டிருப்பார்கள். 

வீடு வசதியின்றி வாழ்ந்தவர்கள் கொஞ்சம் காலம் சென்றவுடன் உலகத்தையே ஆட்டிப் படைக்கக் கூடிய தலைவர்களாகவும் பெரும் பெரும் செல்வங்களுக்கு சொந்தர்க்காரர்களாகவும் மாறிவிட்ட வரலாற்றை நாங்கள் பார்க்கின்றோம். எனவே, எந்தவொரு சமுதாயமும் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்றால் கல்வி. கலாச்சாரம், பொருளாதாரம் ஆகிய மூன்று விடயங்களிலும் கண்டிப்பாக கவனம் செலுத்தியாக வேண்டும். கல்வியில்லாத சமூகம் ஒரு போது நிலைக்காது

ஒரு காலத்தில் சிறுபான்மையினமாக வாழ்ந்து கொண்டிருந்த சமூகத்தினர் மத்தியில் பெரும்பான்மையினத்தவர்கள் தொழில் புரிந்து வந்ததை நாங்கள் பார்த்திருக்கின்றோம். அவர்கள் கல்வியிலே முன்னேற்றம் கண்டார்கள். அவையெல்லாம் தலை கீழா மாறிவிட்டன. கல்வியிலே அவர்கள் வளர்ச்சி கண்டதுடன் சிறுபான்மையின சமூகத்தை அவர்கள் மிதிக்க ஆரம்பித்து விட்டார்கள் அவர்களையே தங்களுடைய கையாட்களாக மாற்றுவதற்குரிய முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். எனவே கல்வி என்பது ஒரு சாதாரண விடயமல்ல. கலாச்சாரம், பொருளாதாரம் பற்றி இஸ்லாம் விரிவாச் சொல்லி இருக்கின்றது. இஸ்லாம் சொல்லுகின்றபடி கடைப்பிடிப்போமானால் நிச்சயமாக நாங்கள் சகல காரியங்களிலும் முன்னேற்றங்களைக் காணலாம்.

எங்களுடைய அரபுக் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வியிலே உயர்ந்த இடத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் அவர்களை சிறந்த அறிஞர்களாக மாற்ற வேண்டும். எதிர்காலத்தில் அவர்கள் முகம் கொடுக்கக் கூடிய சவால்களுக்கு சரியான பதிலைக் கொடுக்கக் கூடிய அறிஞர்காளக மாற்ற வேண்டும் என்ற நல்ல நோக்கிலேயே எங்களுடைய கல்விப் பணி அமைந்துள்ளது மூன்று மாதம் இரண்டு மாதம் படித்து விட்டு வந்து சமூகத்திலே கண்ட நின்றபடி தம்முடைய நாவினால் உலரும்படியான மார்க்க அறிஞர்களாக ஆக்கி விடாமல் நல்ல தலைசிறந்த சமூகப் பற்றுள்ள மார்க்க அறிஞர்களாக உருவாக்குவதற்காகவே இந்த புதிய கணினி தொழில் நுட்ப நிலையத்தையும் அவர்களுக்காக நாங்கள் அமைத்திருக்கின்றோம்.

கணினிக் கல்வி இன்று மிக அத்தியாவசியமான தொன்றாகும். மாற்றுக் கருத்தில்லை. நாங்கள் படக் கூடிய கஷ;டம் எங்களுக்கு விளங்குகின்றது. ஒரு காலத்தில் ஆசானிடத்தில் அமர்ந்து புத்தகங்களைப் பிரட்டி வைத்து வாசித்து விளங்கி கிரகித்து அறிவைத் தேடிய ஒரு காலம் இருந்தது. ஆனால் தொழில் நுட்பம் வளர்ந்து விட்ட இன்றைய காலத்திலே அறிவைத் தேடக் கூடிய வசதி வாய்ப்புக்ளும் வந்து விட்டன. இந்த அடிப்படையில் மாணவர்களுக்கு அத்தியாவசியமானதாக இருந்து கொண்டிருக்கிறது. அவர்கள் எவ்வளவுதான் புத்தகங்களைப் படித்தாலும் ஆசிரியரிடத்திலிருந்து கல்விகளைக் கற்றுக் கொண்டாலும் அவர்களிடத்தில் கணினித் தொழில் நுட்ப அறிவும் கூட இருத்தல் அவசியமாகும். என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுச் செயலாளர் ஏ. எல். கலிலுர்ரஹ்மான், நிதிச் செயலாளர் எம். எம். ஹிதுமத்துல்லாஹ், தாருத் தவ்ஹீத் அரபுக் கல்லூரியின் உப அதிபர் அஷ;nஷய்க் எம். சி. எம். அன்சார், பிரதி அதிபர் எஸ். யூ எம். சமீம், உண்மை உதயம் சஞ்சிகை ஆசிரியர் அஷ;nஷய்க் எஸ். எச். எம். இஸ்மாயீல் ஸலபி உள்ளிட்டவர்களுடன் அரபுக் கல்லூரி ஆசிரியர்கள் கணினித் தொழில் நுட்ப நிலையத்தின் பொறுப்பதிகாரி எம். எம். எம். ரிழ்வான் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :