இலங்கை முஸ்லிம்களின் பிரச்சனைகுறித்து மக்கா இமாம் சுதேசிடம் பேசினார் ஆசாத் சாலி

லங்கை முஸ்லிம்களின் நெருக்கடிகள் குறித்து மக்கா மதினா இமாம் சுதேசியிடம் ஆஸாத் சாலி எடுத்துரைப்பு -2013 -11 -06

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஆசாத் சாலி மக்கா மதீனா ஆகிய இடங்களின் புனித பள்ளிவாசல்களின் தலைவர் இமாம் சுதேசியை அண்மையில் மக்காவுக்கு ஹஜ் கடமைக்காக சென்றிருந்த போது சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது ஆசாத் சாலி இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள நிலைமைகள் பற்றி இமாம் சுதேசிக்கு விரிவாக விளக்கம் அளித்தார்.

அத்தோடு இலங்கையில் பள்ளிவாசல்களின் பாதுகாப்புக்காகவும் மக்கா மதினா ஆகிய இடங்களில் விஷேடதொழுகை மற்றும் பிராத்தனைகள் என்பனவற்றை நடத்துமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த சந்திப்பின்போது இமாம் சுதேசி ஆசாத் சாலிக்கு தங்க முலாம் பூசப்பட்ட குர்ஆன் பிரதியொன்றை கையளிப்பதை படத்தில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :