-எமது செய்தியாளர்-
கடந்த செவ்வாய்க்கிழமை அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் புதிய நீதி மன்றக் கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டன. இந்நிகழ்வுகளில் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் மற்றும் நீதி அமைச்சர் ரவுப் ஹக்கீம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரான நீதி அமைச்சர் ரவுப் ஹக்கீம் இது வரை கலந்து கொண்ட நிகழ்வுகளில் இந்த நிகழ்விற்குத்தான் முஸ்லிம் காங்கிரஸ் சார்பான அரசியல் பிரமுகர்கள் பெருமளவில் பங்குபற்றியிருந்தனர்.
அமைச்சர் ஹக்கீம் அம்பாரை மாவட்டத்தில் கடந்த காலங்களில் பெருமளவிலான நிகழ்வுகளில் பங்கு பற்றியிருந்த போதும், அவர் சார்பான கட்சியின் அதிகாரத்திலுள்ளவர்கள் குறைந்தளவிலேயே சமூகமளித்திருந்தனர். இருந்தும் அக்கரைப்பற்று நிகழ்விற்கு சகலரும் கலந்து கொண்டமைக்கான காரணம் தற்போது மக்கள் மத்தியில் பேசப்படுடுகின்றது.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மூலம் முகவரி பெற்று பணக்காரர்களாகும் அரசியல் வாதிகள் அந்தக் கட்சியின் தலைவர் கலந்து கொள்ளும் நிகழ்வுகளை பெருமளவில் புறக்கணித்தே வந்துள்ளனர்.
இதற்குக் காரணம் நாம் எது செய்தாலும் ஹக்கீம் நடவடிக்கை எடுக்கமாட்டார் என்ற அசையாத நம்பிக்கையில் இவ்வாறு நடந்து கொண்டார்கள். அண்மையில் கல்முனை மேயர் விடயத்தில் ஹக்கீம் நடந்து கொண்ட விதத்தில் இன்று இவர்களுக்கும் பயம்; பிடித்துவிட்டது எனச் சொல்லப்படுகின்றது.
அம்பாரைக்குத் தலைவர் வருகின்றாராமே நீங்களும் வருகின்றீர்களா? என ஆதரவாளர் ஒருவர் முஸ்லிம் காங்கிரஸ் அதிகார தரப்பு நபரிடம் கேட்கின்றபோது, தலைவருக்கு பைத்தியம் எனக்கு நேரமில்லை அவர் தேவை என்றால் வந்துவிட்டுப் போகட்டும் எனப் பதில் வருமாம்.
இப்படி சொல்லிப் பழக்கப்பட்டவர்கள் அக்கரைப்பற்றிலும், பொத்துவிலிலும் படையெடுத்தார்கள். ஹக்கீமை சதா சூழ்ந்து கொண்டே நின்றார்கள். தலைவருக்கு அவ்வளவு மரியாதை கொடுத்தார்கள். மக்களுக்கு முன்னால் காலுக்கு மேல் கால் போடுபவர்கள், கைகட்டி நல்ல பிள்ளைகள் போன்று இருந்தார்கள்.
என்ன கொடுமையப்பா, பதவிக்காக எதையுமே செய்வார்கள். தலைவரிடம் பயம் இருந்தால்தான் கட்சி சரியான வழியில் பயணிக்கும். வாக்களித்த மக்களையும் கொஞ்சம் நினைத்துப் பார்ப்பார்கள்.
அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பான மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசீம், ஹம்.ரீ.ஹசன் அலி, மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஏ.எல்.தவம், ஏ.எம்.ஜெமீல், மாகாண அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் இவர்களுடன் பிரதேச சபைகளின் தவிசாளர்களான அட்டாளைச்சேனை எம்.ஏ.அன்ஸில், நிந்தவூர் ஏ.எல்.தாஹிர், பொத்துவில் எம்.எஸ்.எம். வாசித், இறக்காமம் ஜபீர் மௌலவி ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் மஜீத், முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் முழக்கம் அப்துல் மஜீத், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், அபிமானிகள் என நிரம்பி வழிந்தனர்.
அமைச்சர் அதாஉல்லாவோடு மிக நெருக்கமான உறவுகளை வைத்துக் கொண்டு லாபம் பெறும் தவிசாளர்களும் கும்பிடாத குறையாக ஹக்கீமைப் புகழ்ந்து தள்ளினர்.
சதா கொந்தராத்து செய்வதிலேயே காலம் கடத்தும் நமது அரசியல் அதிகார தரப்பினர் முழ நாளாக எல்லாவற்றையும் மறந்து பொத்துவிலிலேயே முகாமிட்டனர். கட்சியைப் பற்றி எந்த அக்கரையும் இல்லாதவர்கள் கட்சி எங்கள் உயீர் மூச்சு என்று நாடகங்களை தலைவருக்கு முன்னால் அரங்கேற்றினார்கள்.
இதனைப் பார்த்துக் கொண்டிருந்த பொத்துவில் முஸ்லிம் காங்கிரஸ் மூத்த போராளி ஒருவர், என்னமா நடிக்கானுகள். ஹக்கீமுக்கு என்ன விழங்காமலா போகும். தேர்தல் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என முனு முனுத்தார்.
பிரதேச சபைகளில் கட்சிக்காரனுக்கு அநியாயம் செய்து பச்சோந்திகளுக்கு இடம்கொடுக்கும் இந்தத் தவிசாளர்களை விரட்டி அடிக்க வேண்டும். தனக்கு பிடித்த இரண்டொரு பேரை சபையில் வைத்துக் கொண்டு வாக்களித்த ஒட்டுமொத்த ஆதரவாளர்களையும் புறக்கணிக்கின்றனர்.
எப்படியெல்லாம் இந்த எடுபிடிகள் உழைக்கின்றார்கள் பாருங்கள். இதல்லாம் எங்களுக்கென்ன தெரியாதா? பொறுமையாக இருக்கின்றோம். எல்லாவற்றிற்கும் ஒருநாள் பதில் சொல்ல வேண்டும். தவிசாளர்கள் எங்கள் கையாள். நான் சொல்வதைத்தான் கேட்பார்கள் என்கின்ற ஆணவம் ஒருநாள் அழியும் என தனது பக்கத்திலிருந்த ஒருவரிடம் கவலை படச்சொன்னார்.
அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தெரிவு செய்யப்பட்ட கல்முனை ஹரீசும், நிந்தவூர் பைசலும் அடிக்கடி முரண்படுபவர்களாக கடந்த காலங்களில் இருந்தனர்.
இவர்கள் பொத்துவில் நிகழ்வில் மிக நெருக்கமாக இருந்ததை பலரும் அவதானித்தனர். நீதிமன்றக் கட்டிடத் திறப்பு விழா முடிந்ததும் மதிய உணவுக்காக அருகம்பை ஹோட்டலுக்கு ஒரே வாகனத்தில் இவர்கள் இருவரும் சென்றனர்.
விரைவில் பிரதி அமைச்சுப் பதவிகள் முஸ்லிம் காங்கிரசுக்குக் கிடைக்கும் என அடிபடுவதால் ஒன்றுபட்டு செயற்படும் போது இரண்டுபேரும் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் என திட்டம் தீட்டியுள்ளனரோ தெரியவில்லை. இருந்தாலும் ஒரே கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் ஒற்றுமை என்பது மிக அவசியமாகும்.

0 comments :
Post a Comment