காத்தான்குடி பாத்திமா பாலிகா வித்தியாலயத்தின் முப்பெரும் விழா





-நஸீப் முஹ்ம்மட்- 
ட்டக்களப்பு காத்தான்குடி பாத்திமா பாலிகா வித்தியாலயத்தின் முப்பெரும் விழா கடந்த 02.11.2013 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி அன்வர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் பாத்திமா பாலிகா வித்தியாலயத்தின் அதிபர் எம்.எம்.எம்.யூனுஸ் தலைமையில் நடைபெற்றது.

சிறுவர் தின நிகழ்வு,ஆசிரியர் தின நிகழ்வு,வருடாந்த பரிசளிப்பு விழா ஆகிய மூன்று நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக காத்தான்குடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.சுபைர்,காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர்,நகர சபை உறுப்பினர் பாக்கீர் உட்பட பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள்,மாணவிகள்,பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 

 இதன்போது சிறுவர் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கும்,பாடசாலை பரீட்சையில் அதி கூடிய பிள்ளைகளைப் பெற்ற மாணவிகளுக்கும்,ஏனைய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் அதிதிகளினால் பரிசில்கள் வழங்கப்பட்டன.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :