ஜே.வி.பி.யை முற்றும் முழுதாக மாற்றியமைக்க அக்கட்சியின் அரசியல் சபை தீர்மானித்துள்ளது.
ஜே.வி.பி.யின் தலைமைத்துவத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாகவும் இது தொடர்பாக இப்போது தீர்க்கமான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மூன்று மாகாண சபைத் தேர்தல்களிலும் ஜே.வி.பி.யின் பின்னடைவுக்கு கட்சியிலுள்ள முக்கியஸ்தர்கள் அனைவரும் பொறுப்புக் கூற வேண்டுமெனவும் அரசியல் சபை தெரிவிக்கின்றது.
இப்போதுள்ள சிரேஷ்ட உறுப்பினர்களைத் தவிர்த்து புதிய முகமொன்றை தலைமைப் பதவிக்கு நியமிக்க வேண்டுமென அக்கட்சியின் அரசியல் சபை உறுப்பினர்கள் பலர் கருதுகின்றனர்.
அக்டோபர் மாதம் முடிவடைவதற்கு முன்னர் ஜே.வி.பி. தலைமையிலும் அரசியல் சபையிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுமெனவும் ஜே.வி.பி.வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments :
Post a Comment