சினிமாவில் சுயமரியாதையுடன் இருப்பது கஷ்டம் என்று ரஜினிகாந்த் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாரதிராஜாவின் இயக்கத்தில் கடந்த 1977ம் ஆண்டு ரஜினிகாந்த்– கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான படம் 16 வயதினிலே.
இந்த படத்தை எஸ்.ஏ.ராஜ்கண்ணு தயாரித்து இருந்தார். 36 வருடங்களுக்குப்பின் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் மெருகேற்றப்பட்டு இருக்கிறது.
இதன் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னை வடபழனியில் உள்ள கமலா தியேட்டரில் நேற்று நடந்தது. டிரைலரை பாரதிராஜா முன்னிலையில், ரஜினிகாந்த்–கமல்ஹாசன் ஆகிய இருவரும் சேர்ந்து வெளியிட்டார்கள்.
இவ்விழாவில் ரஜினிகாந்த் பேசியபோது, 36 வருடங்களுக்கு முன் வெளிவந்த 16 வயதினிலே படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது சந்தோஷமாக இருக்கிறது.
அந்த காலகட்டத்தில் தயாரிப்பாளர் ராஜ்கண்ணு கமல்ஹாசனிடம் நெருக்கமாக இருப்பார், என்னுடன் நெருக்கமாக இருக்க மாட்டார். அவர் என்னிடம் கால்ஷீட் கேட்டதில்லை.
விஸ்வரூபம் பட பிரச்சினை ஏற்பட்ட போது, பதினாறு வயதினிலே படத்தை திரும்ப எடுக்கப் போகிறேன். அதில் கிடைக்கும் பணம் முழுவதையும் கமல்ஹாசனுக்கு கொடுப்பேன் என்று அறிவித்தவர் ராஜ்கண்ணு.
அவர் கஷ்டத்தில் இருந்தபோதும், நட்புக்கு மரியாதை கொடுத்த கண்ணியமான மனிதர் அவர். பதினாறு வயதினிலே படத்தை ரூ.5 லட்சம் செலவில் அவர் தயாரித்தார்.
அப்போது ரூ.5 லட்சம் என்பது பெரிய தொகையாக இருந்தது. படத்தை யாரும் வாங்காததால், அவரே ரிலீஸ் செய்தார், படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
அப்போது கமல் பெரிய ஸ்டார், ஸ்ரீதேவியும் பெரிய ஸ்டார். நான் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தேன்.
பதினாறு வயதினிலே படத்தை அடுத்து, ராஜ்கண்ணு நினைத்தால் பெரிய நடிகர்களை வைத்து படம் எடுத்திருக்கலாம். ஆனால் அவர் துணிச்சலாக புதுமுகங்களை வைத்து, ‘கிழக்கே போகும் ரெயில்’ படத்தை எடுத்து வெற்றி பெற்றார்.
பணம் அதிகம் இருந்தால் கூட, சினிமாவில் சுயமரியாதையுடன் இருப்பது கஷ்டம்.
ராஜ்கண்ணு சுயமரியாதை பார்ப்பவர், அவர் யாரிடமும் போய் நின்றதில்லை.
பதினாறு வயதினிலே படத்துக்காக விழா வைக்கப் போகிறேன் என்று அவர் வந்து என்னை அழைத்தபோது, இந்த படத்தின் மூலம் உங்களுக்கு வருமானம் கிடைக்குமானால் வருகிறேன் என்றேன்.
அதன்படி வந்து இருக்கிறேன், எல்லா மனிதர்களுக்கும் நல்ல காலமும் வரும், கெட்ட காலமும் வரும். எதுவும் நிரந்தரம் அல்ல.
இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். ரசிகர்கள் வெற்றி பெற வைக்க வேண்டும். ராஜ்கண்ணு மாதிரி தயாரிப்பாளர்கள் நிறைய பேர் சினிமாவுக்கு வர வேண்டும் என்று பேசியுள்ளார்.

0 comments :
Post a Comment