-ஜெஸ்மி எம். மூஸா-
சமுதாய வழிகாட்டி, உளவியலாளர், கணிதஆமதை, மருத்துவர், ஆய்வாளர், எழுத்திலக்கிய காரர் எனப் பல்வேறு தளங்களில் நின்று உலகை இயக்கும் இயக்கசக்திகளுக்கு எரிபொருளாகத் திகழ்வது ஆசிரியமே.
எழுத்தறிவித்தவன் ஆசிரியனாவான் என்ற ஆத்திசூடி வாக்கியம், அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு எனும் திருக்குறளின் முதலாவது பதிவு, ஓதுவீராக- படிப்பீராக! என்கின்ற அல்-குர்ஆனின் முதற் கட்டளை என்பவைகளை வைத்துப்பார்க்கும் போது ஆசிரியம் அல்லது கற்பித்தல் என்பது இறைத்துவ மகிமையின் வெளிப்பாடென்பது புலனாகின்றது.
இம்மேன்மை மிக்க ஆசிரியப் பணியில் இணைகின்ற ஒவ்வொருவரும் தம்மீது சுமத்தப்பட்டுள்ள மாணவ அமானிதத்தை நற்பண்புகளும், சமூக உயர் அந்தஸ்தும் மிக்கதாக ஆக்குவதற்கு எடுக்கின்ற விடாமுயற்சியையும் தியாக சிந்தனையையும் கௌரவிப்பதற்காக உலகளவில் ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ வரையறுத்துள்ள ஏற்பாடே சர்வதேச ஆசிரியர் தினமாகும்.
இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் ஒக்டோபர் 6 ஆம் திகதி சர்வஆதச ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகின்ற போதும் செப்டம்பர் 5 இல் இந்தியாவிலும், ஒக்டோபர் 5 இல் ரஷ;யாவிலும், மே 2 இல் ஈராக்கிலும், ஜனவரி 16 இல் தாய்லாந்திலும், நவம்பர் 24 இல் துருக்கியிலும் என வௌ;வேறு நாடுகளிலும் பல்வேறு காலங்களில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதுடன் சில நாடுகளில் விடுமுறை தினமாகவும் இது பிரகடனப்படுத்தப்பட்டு சிறப்பிக்கப்படுகின்றது.
உலகத்தரப்பிலுள்ள ஏனைய எல்லா அமைப்பினரது வழிகாட்டலை விடவும் மாணவ சமூகத்தால் கௌரவமாக உவந்தேற்கப்படுகின்ற வழி காட்டல் ஆசிரியர்களுடையதே.
தன்னிடம் ஒப்படைக்கப்படுகின்ற மாணவப் பயிரை பல்வேறு தியாகங்களுக்கும் பொறுமைகளுக்கும் மத்தியில் வளர்ந்தெடுக்கின்ற கைங்காரியங்களின் சொந்தக்காரர்களான ஆசிரியர்களை கௌரவிப்பதற்கு தினங்களினூடான ஞாபகமூட்டல் மாத்திரம் போதாது என்பதே பொதுப்படையான, வெளிப்படையான கருத்து.
இருப்பினும் இன்றைய தினத்தில் நாம் செய்கின்ற வழமையான கொண்டாட்டங்கள் கௌரவிப்புக்கள் என்பவற்றிற்குப் புறம்பாக ஆசிரிய- மாணவ வழிநடத்துதலில் கீறல்கள் ஏதாவது ஏற்பட்டிருப்பின் அதனைப் பரஸ்பரம் உறவாடி நல்லதொரு ஐக்கியத்தை வளர்த்துக் கொள்கின்ற சந்தர்ப்பமாக ஆசிரியர் தினம் பயன்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் வெறுமனே தின வழிபாடாக மட்டுமன்றி உணர்வுபூர்வமான நோக்க அடைவை விதைக்கின்ற தினமாக இத்தினம் மாறும்.
கிருஷ;ணரின் குருவாக சந்தப்பாணியும் அகத்தியரின் குருவாக சிவனும் நபித்தோழர்களின் கற்பிப்பாளராக முஹம்மத் (ஸல்) அவர்களும் இருந்தமையினை வேதநூல்கள் வாயிலாக அறிய முடிகின்றது. இப்படிப்பட்ட உயர்நிலை அந்தஸ்தாக வைத்து மதிக்கப்படும் கற்பித்தலை அல்லது எத்திவைத்தலைச் சுமந்த ஆசிரியர்களும் தமது நிலையினையும் தம் பொறுப்புக்களையும் பற்றிச் சிந்தித்துத் தம்மைப் புடம் போடுகின்ற நாளாக ஆசிரியர் தினம் அமைய வேண்டும் என்பதே இத்தினத்தின் அடைவு நோக்கமாகும்.
ஆசிரியர்களின் காலில் விழல், அவர்களை சந்திக்கும் வேளைகளில் பயபக்தியுடன் நடத்தல், எழுந்து மரியாதை செய்தல், வினாக்களுக்கு விடை பகரும்போது எழுந்த நின்று கை உயர்த்துதல் போன்றன மரியாதையின் ஏற்பாடுகளாக பல்வேறு சமயங்களிலும். நாடுகளிலும் ஓரளவு எஞ்சியிருக்கின்ற போதிலும் மாணவர்களுக்குத் தண்டனை வழங்காமை, குரு குல வாசகக் கல்வி முறையின் மாற்றம், கட்டாய வகுப்பேற்றம் முதலிய கல்விக் கொள்கையின் முன்னெடுப்புக்களால் ஆசிரியத்துவம் வலுவிழந்து வருகின்றது என்ற சிந்தனை பல்வேறு நாடுகளில் இன்று வேரூன்றி வருகின்றது.
வரலாறு;றுக் காலங்களில் வலம்வந்த அவைக்களப் புலவர்கள் முதல் ஆல்பட் ஐன்ஸ்டீன், மரியா மெண்டெஸ் சோரி, ஸ்ரீபன் ஹாக்கீன்ஸ் போன்ற விஞ்ஞானத்துறை அறிஞர்கள் மற்றும் இந்திய ஆசிரியர் தினத்தின் மூலகர்த்தாவான இந்தியாவின் இரண'டாவது ஜனாதிபதி டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ;ணன் அடங்கலாக இன்றுள்ள பல முதன்நிலை அதிகாரம் படைத்தவர்கள் ஆசிரியர்களாகத் தம்பணி தொடர்ந்திருக்கின்றமை வரலாறு.
இவர்கள் அனைவரும் ஒரு குறித்த துறை சார்ந்தவர்களை உருவாக்கும் வல்லமை படைத்தவர்களாக மாறி இருக்க இவர்களின் தொடக்கப் பணியான ஆசிரியம் தொடர்ந்தும் பல்துறை ஆளுமை மிக்கவர்களைப் பிரசவித்துக் கொண்டிருப்பதே ஆசிரியத்தின் சிறப்பாகும். ஏனையவை 'தொழில்' என்ற வகைப்பாட்டிற்குள் மேலோட்டமாகக் கூறினாலும் ஆசிரியம் என்பது பணி, சேவை என்ற அடைகளுக்கே உரியது. இப்படிப்பட்ட சேவையாளர்களை கௌரவிப்பதற்கான இத்தினம் உணர்வுபூர்வமான சங்கமமாக மாறும் போதே அதன் உண்மத்துவம் பீறிடும்.
உலகத்தில் கல்வியை இலவச மயப்படுத்தியுள்ள நாடுகளில் இலங்கைக்கு எப்போதும் தனியிடம் இருந்து வருவதுடன் இலங்கையின் கல்விக் கொள்கைகளும் தரமும் உயர்ந்து கொண்டே வருகின்றது. இவ் உயர்ச்சிக்குப் பின்னால் நிற்கும் ஆசிரியர்களில் உயர்பணி ஆற்றுகின்றவர்களைக் கௌரவிக்கம் நோக்கில் இலங்கை அரசினால் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வழங்கப்படுகின்ற ஜனாதிபதியின் 'பிரதீபா பிரபா' இலங்கையில் உயிரோட்டமுள்ள ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகின்றது என்பதற்கான வலுவான சான்றாகும்.
தூய், தந்தை, மனைவி மற்றும் உறவுகளை நினைப்பதற்குக் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களை வரையறுக்கும் சங்கப் பாடலொன்று '.......நினை எவ்விடத்தும் உன் ஆசானை' எனக் கூறுகின்றது. எனவே, இதுபோல் இத்தினத்தில் மட்டும் நினைக்கின்ற ஒருவராக அல்லாமல் எம் வாழ்நாள் முழுவதும் ஞாபகமூட்டப்படுகின்ற பாத்திரமாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்பதே ஆசிரியர் தினத்தின் எதிர்பார்ப்பாகும்.

0 comments :
Post a Comment