மும்பை இந்தியன்ஸ் சம்பியன் ஆனது!

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது.

இதில் டிராவிட் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்– ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. முதலில் நாணய சுழற்சியை வென்ற ராஜஸ்தான் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சுமித் மற்றும் தெண்டுல்கர் களம் இறங்கினர்.

இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். தெண்டுல்கர் 15ஓட்டங்கள் எடுத்த நிலையில் வாட்சன் பந்தில் ஆட்டமிழந்தார். சுமித்துடன் ஜோடி சேர ராயுடு களம் இறங்கினார்.

சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த சுமித், 5 பவுண்டரிகள், 1 சிக்ஸ் அடித்து 44ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். அதன்பின் தலைவர் ரோகித் சர்மா களம் இறங்கி அதிரடி ஆட்டத்தை தொடங்கினார். ராயுடு 29 ஓட்டங்களில் ஆட்டமிழ்ந்தார். அடுத்து களம் இறங்கிய பொல்லார்டு 15 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்மா 14 பந்தில் 33 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருடன் இணைந்து விளையாடிய மேக்ஸ்வெல் 14 பந்தில் 37ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரும் அணியில் ஸ்கோரை உயர்த்தினர். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 202 ஓட்டங்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியில் அதிக பட்சமாக டம்பி 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

203 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது ராஜஸ்தான் அணி. தொடக்க ஆட்டக்காரர்களாக பெரேரா மற்றும் ரஹனே களம் இறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரிலே பெரேரா 8 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து களம் இறங்கிய சாம்சன், ரஹனேவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ஓட்டங்கள் குவிக்க ஆரம்பித்தன. இருவரும் அரைசதம் கடந்த நிலையில் சாம்சன் 60ஓட்டங்களிலும் ரஹனே 65 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து களம் இறங்கிய ஆட்டக்காரர்கள் வாட்சன் 8, பின்னி 10, கூப்பர் 4, டிராவிட் 1,யாக்னிக் 6, சுக்லா 0, டம்பி 0 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் ராஜஸ்தான் அணி 18.5 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை அணி 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது.

மும்பை தரப்பில் ஹர்பஜன் சிங் 4 விக்கெட்டுகள், பொல்லார்டு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :