மாவனல்ல பருதிகியல் பாடசாலை அதிபர் ஒருவர் திங்கட்கிழமை மாலை பாடசாலை அதிபர் ஒருவரை மூன்று ஆசிரியர்கள் கடுமையாகத தாக்கிய சம்பவமொன்று நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாவனல்ல வேத்தல வித்தியாலய பாடசாலை அதிபரே தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். இது குறித்து அதிபர் மாவனல்லை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
பாடசாலைக்கட்டுப்பாடுகளையும் ஒழுக்கத்தையும் மீறிச் செயல்பட்ட மேற்படி மூன்று ஆசிரியர்களையும் கண்டித்துத் திங்கட்கிழமை மாலை பாடசாலை விட்டு வெளியேறிய போது இம்மூன்று ஆசிரியர்களும் தன்னை கடுமையாகக்தாக்கியதாக தனது முறைப்பாட்டில் அதிபர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அதிபருக்கு எதிராகவும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மூவரும் முறைப்பாடு செய்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விரு தரப்பு முறைப்பாடுகள் குறித்தும் மாவனல்ல வலய கல்விப்பிரிவு அதிகாரிகளும் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். -
0 comments :
Post a Comment