5வயது மகளை அடித்து துன்புறுத்திய மதபோதகருக்கு சிறை

களை அடித்து துன்புறுத்தி அவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மதபோதகர் ஒருவருக்கு சவுதி அரேபியாவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

800 கசையடிகளும் 8 வருட சிறைத்தண்டனையும் குறித்த மத போதகருக்கு விதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் குறித்த நபரை சவுதி நீதிமன்றம் விடுதலை செய்யலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு ஊடகங்கள் அது குறித்து பரவலாக செய்தி வெளியிட்டிருந்தன.

எனினும் இதனைத் தடுக்கும் வகையில் செயற்பாட்டாளர்கள் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

சவுதி மத ஸ்தாபனத்தினால் குறித்த நபர் மத போதகராக அங்கீகரிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருதிப் பணத்தை தாய் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் குறித்த நபர் விடுவிக்கப்படலாம் என செயற்பாட்டாளர்கள் அச்சம் வெளியிட்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :