உலகிலேயே பழமையான சினிமா திரையரங்கு மீண்டும் திறப்பு

பிரான்ஸ் நாட்டின் துறைமுக நகரமான மார்செய்லின் அருகில் உள்ள லா சியோடட் என்ற சிற்றூரில்தான் உலகின் பழமையான ஈடன் தியேட்டர் உள்ளது. இங்குதான் கடந்த 1899 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 21ம் திகதி திரையுலகின் முன்னோடி என்று கருதப்படும் லூமிரே சகோதரர்களான ஆகஸ்ட் மற்றும் லூயி தங்களின் திரைப்படத்தை வெளியிட்டார்கள்.

இதனை அப்போது 250 இரசிகர்கள் ஆச்சரியத்துடன் கண்டு களித்தார்கள். அதன்பின்னர் இங்கு பிரபல நடிகர்களின் திரை நாடகங்களும், திரைப்படங்களும் வெளியிடப்பட்டன.

யூவஸ் மோண்டான்ட், பெர்னாண்டல் போன்ற பிரபல பிரான்ஸ் நாட்டு நடிகர்கள் தங்களின் திரை நாடகங்களையும் இங்கு நடத்தியுள்ளார்கள். ஆனால், கடந்த 1980களில் நடைபெற்ற திருட்டு சம்பவம் ஒன்றில் திரையரங்கின் உரிமையாளர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு திரையிடப்பட்ட நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்பட்டன.

அதன்பின்னர் ஒவ்வொரு வருடமும் திரைப்பட விழாவில் பிரெஞ்சு மொழித் திரைப்படங்கள் காண்பிக்கப்படும் ஒரு வாரம் மட்டும் இந்தத் திரையரங்கு செயல்பட்டு வந்தது. அதன்பின்னர் கடந்த 1995 ஆம் ஆண்டில் இந்தத் திரையரங்கு மூடப்பட்டது.

தற்போது சீரமைக்கப்பட்டுள்ள இந்த ஈடன் தியேட்டர் இன்று மீண்டும் திறக்கப்பட உள்ளது. தரையில் இருந்த பழைய விரிப்புகளுக்குப் பதிலாக ஓக் மரத்தினாலான தளங்கள், தூசி நிறைந்த நாற்காலிகளுக்குப் பதிலாக வெல்வெட்டினால் ஆன இருக்கைகள், மொசைக் டைல்களுடன் கூடிய புதிய மஞ்சள் நிற சுவர்பூச்சுகளுடன் இப்போது அந்தத் தியேட்டர் கம்பீரமாகக் காணப்படுகின்றது.

நடிகைகள் ஜூலியட் பினோச், நத்தாலி பே மற்றும் திரைப்பட இயக்குநர் ரோமன் போலன்ஸ்கி போன்றோர் இந்தக் கண்கவர் ஆரம்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :