சாம்பியன்ஸ் லீக் தொடரின் அரையிறுதியில் சொதப்பிய சென்னை அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து வெளியேறியது.
சொந்த மண்ணில் தனது வெற்றிநடையை தொடர்ந்த ராஜஸ்தான் அணி இறுதிச்சுற்றுக்கு சுலபமாக முன்னேறியது.
இந்தியாவில், 5வது சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் நடக்கிறது. ஜெய்ப்பூரில் நேற்று இரவு நடந்த முதலாவது அரையிறுதியில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் மோதின.
சென்னை அணியில் ஆல்பி மார்கல் நீக்கப்பட்டு கிறிஸ் மோரிஸ் இடம் பெற்றார். ராஜஸ்தான் அணியில் அசோக் மனேரியாவுக்கு பதிலாக திஷாந்த் யாக்னிக் தெரிவு செய்யப்பட்டார்.
நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணித்தலைவர் டோனி களத்தடுப்பை தெரிவு செய்தார்.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 159ஓட்டங்கள் எடுத்தது.
கெவான் கூப்பர் 14ஓட்டங்களும், வாட்சன் 32 ஓட்டங்களும், ரகானே 2 சிக்சர், 6பவுண்டரியுடன் அரைசதம் கடந்து 70 ஓட்டங்களும் எடுத்தனர். சென்னை சார்பில் டுவைன் பிராவோ அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார்.
சவாலான இலக்கை விரட்டிய சென்னை அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 145ஓட்டங்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.

அதிகபட்சமாக ரெய்னா 29ஓட்டங்களும், அஷ்வின் 46 ஓட்டங்களும், மோரிஸ் 26ஓட்டங்களும் எடுத்தனர். ராஜஸ்தான் சார்பில் 3 விக்கெட் வீழ்த்திய டாம்பே ஆட்டநாயகன் விருதை வென்றார்.
நேற்று சென்னை அணியை வீழ்த்திய ராஜஸ்தான் அணி சாம்பியன்ஸ் லீக் அரங்கில் முதன்முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. தவிர, சாம்பியன்ஸ் லீக் தொடரில் ராஜஸ்தான் அணி முதன்முறையாக பங்கேற்கிறது.

0 comments :
Post a Comment