சின்னத்திரையில் தொகுப்பாளராக களமிறங்கவுள்ளார் புன்னகை இளவரசி சிநேகா

சின்னத்திரையில் தொகுப்பாளராக களமிறங்கவுள்ளார் புன்னகை இளவரசி சிநேகா.பிரசன்னாவை மணந்த பின்னர் விளம்பரங்களின் மூலம் ரசிகர்களை சந்தித்து வந்தார் சிநேகா.இந்நிலையில் தற்போது சன் தொலைக்காட்சியில் கேம்ஷோ ஒன்றை தொகுத்து வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காதல் திருமணம் செய்து கொண்ட சிநேகாவும், பிரசன்னாவும் இப்போது தனிக் குடித்தனம் நடத்தி வருவது சினிமா வட்டாரமே தெரிந்த செய்திதான்.சிநேகா, பிரசன்னா இருவருக்குமே சொல்லிக் கொள்கிற மாதிரி படங்களும் கைவசம் இல்லாததால் விளம்பரங்களில் மட்டுமே நடித்து வருகின்றனர்.

இதுநாள் வரை பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும், நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க வந்த அழைப்புகளை வேண்டாம், முடியாது என்று மறுத்து வந்தவர், தற்போது ஓகே சொல்லிவிட்டாராம்.அதாவது, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் மிகப்பெரிய கேம் ஷோ ஒன்றினை தொகுத்து வழங்க உள்ளாராம்.

பளபளக்கும் பட்டுப் புடவையிலும், ஜொலி ஜொலிக்கும் நகைகளிலும் தககதவென மின்னப் போகிறார்.இதற்காகவே படப்பிடிப்பு அரங்கில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு கடந்த சில வாரங்களாக சூட்டிங் நடைபெற்று வருகிறதாம்.வெள்ளித்திரையில் இருந்து விடைபெற்று விட்ட சிநேகாவை இனி சின்னத்திரை கேம் ஷோ மூலம் கண்டு ரசிக்கலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :