கழிவறையில் மாணவியை ஆபாசமாக படம்பிடித்த மர்ம நபர்

டெல்லி பல்கலைக்கழக கழிவறையை உபயோகித்த ஒரு பெண்ணை கையடக்கத் தொலைபேசியில் படம்பிடித்து தப்பித்துச்சென்ற மர்ம நபரை பொலிசார் தேடிவருகின்றனர்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பு பயின்றுவரும் 25 வயது மாணவி, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கழிவறையை உபயோகித்துள்ளார்.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கழிவறைகள் அருகருகே அமைக்கபட்டிருக்கும் நிலையில், குறித்த பெண் கழிவறைக்குள் இருந்தப்போது, கழிவறைக்குள் நடப்பவற்றை படம்பிடிக்கும் நோக்கத்தில் யாரோ கேமரா கைபேசியை பிடித்திருந்ததை கண்டு திடுக்கிட்டார்.

இம்மாணவி சத்தமிட்டு, உதவிக்காக அழைத்தப்போது அந்த மர்ம நபர் ஜன்னல் வழியாக குதித்து தப்பி சென்றதாக தெரிகிறது.

பல்கலைக்கழக ஊழியர்கள் சிலர் ஒரு ஆண் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து சந்தேகப்படும் விதமாக தப்பி சென்றதை பார்த்த போதிலும், அவரை சரியாக அடையாளம் காணவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழக வளாகத்திற்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்து இத்தகைய கீழ்த்தனமான செயலில் ஈடுபட்டது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :