மட்டக்களப்பு மாவட்டத்தில் குரங்குகளின் அட்டகாசம்

-றிஸ்லி சம்சாட்-
ட்டக்களப்பு மாவட்டத்தில் குரங்குகளின் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கிராமங்களில் அலைந்து திரியும் பல நூற்றுக் கணக்கான குரங்குகள் வீடுகள் மற்றும் பாடசாலைகளின் கூரைகளின் மீது ஏறி கூரைகளைச் சேதப் படுத்துவதுடன் பயன்தரும் பல மரங்களின் பழங்களையும் அழித்து வருகின்றன எனவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின வந்தாறுமூலை மகாவிஷ்ணு வித்தியாலயத்தில் பல கட்டடங்களின் கூரைகளை இந்தக் குரங்குகள் சேதப் படுத்தியுள்ளதுடன் வகுப்பறைகளுக்குள், நுளைந்து தளபாடங்களையும் அழித்துள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவிக்கின்றது.

இத்தயை குரங்குகளின் அட்டகாசம் தொடர்பில் பலமுறை செய்திகள் வெளியானதும் இது பற்றி சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரையில் கவனத்தில் கொள்ளவில்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே இந்தக்குரங்குகளின் அழிவிலிருந்து பாதுகாக்க உரிய சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் வேண்டு கோழ் விடுக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :