மருமகன் தனுஸ் இப்படிப் பண்றாரே, ரஜினி கவலை?

ன்று மளமளவென சொந்தப்படம் எடுக்க கிளம்பி விடுகிறார்கள் ஹீரோக்கள். இளங்கன்று பயமறியாது என்பதைப் போல களத்தில் குதிக்கும் இவர்களுக்கு இது எவ்வளவு பெரிய ஆபத்து என்பது போகப் போகத்தான் புரியும்.

சினிமாவில் வீடு வாசலை இழந்து நிற்கும் பலரும் தங்களுக்குள் புலம்பி வரும் அட்வைஸ்தான் இது. சமீபத்தில் விஷால் மதகஜராஜாவை ரிலீஸ் செய்யப் போவதாக களமிரங்கி, அந்த மன உளைச்சலில் மருத்துவமனையில் சேர்க்கிற அளவுக்கு ஆளானார்.


விஜய் சேதுபதி சங்கு தேவன் என்ற படத்தை தயாரிக்க ஆரம்பித்து, சில நாட்களிலேயே ஆளை விடுங்கப்பா என்று ஓடிப் போனார். அப்புறம் எப்படியோ? இவரை சமாதானப்படுத்தி மீண்டும் தயாரிப்பு வேலையை தொடர வைத்திருக்கிறார்கள். இவர்களில் தனுஷ் எப்படி? எதிர்நீச்சல் என்கிற இவரது முதல் தயாரிப்பே தாறுமாறான ஹிட். இதற்கப்புறம் இன்னும் சந்தோஷமாக இந்த பணியை செய்ய இறங்கிவிட்டார் இவர். ஆனால், சினிமாவில் கரை கண்ட இவரது மாமனாரான சூப்பர் ஸ்டார் ரஜினிக்குதான் தனுஷின் புலிவேக பாய்ச்சல் கவலையளிக்கிறதாம். அவரை அழைத்து சற்று நிதானமாக நடைபோடும்படி கூறியிருப்பதாகத் தகவல் பரவிக்கிடக்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :