சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த அரை இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டிரினிடாட்டை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.5-வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் டெல்லியில் நேற்று இரவு நடந்த2-வது அரை இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்-டிரினிடாட் அண்ட் டொபாக்கோ அணிகள் மோதின.
´டாஸ்´ ஜெயித்த மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, டிரினிடாட் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக சிம்மோன்ஸ்,இவின் லீவிஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள். லீவிஸ் அதிரடியாக ஆடினார்.
ஜான்சன் வீசிய முதல் ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த லீவிஸ் 3-வது ஓவரில் 3பவுண்டரிகள் விளாசினார். ஆனால் சிம்மோன்ஸ் ஓட்ட கணக்கை தொடங்காமலேயே நடையை கட்டினார்.
அடுத்து களம் கண்ட டேரன் பிராவோ 16 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 14ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து சிம்மோன்சுடன் இணைந்த யாக்னிக் ஒட்லேவும் அடித்து ஆடினார். அணியின் ஸ்கோர் 13.1 ஓவர்களில் 93ஓட்டங்கள் இருந்த போது லீவிஸ் (46 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 62 ஓட்டங்கள்) கீரன் பொல்லார்ட் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
பின்னர் வந்த கேப்டன் ராம்டின் 9 ஓட்டங்களிலும், நிகோலஸ் பூரன் 15 ஓட்டங்களிலும் வந்த வேகத்தில் வெளியேறினார்கள். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டிரினிடாட் அணி 5விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்கள் எடுத்தது. யாக்னிக் ஒட்லே 30பந்துகளில் 2 பவுண்டரி, 2சிக்சருடன் 41 ஓட்டகளும், நவின் ஸ்டூவர்ட் 2 பந்துகளில் 2 ஓட்டங்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 157ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

வெய்ன் சுமித் 59 ஓட்டங்களும், தெண்டுல்கர் 35 ஓட்டங்களும், ரோகித் ஷர்மா 25 ஓட்டங்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். தினேஷ் கார்த்திக் 33 ஓட்டங்களும்,பொல்லார்ட் 2 ஓட்டங்களும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் வீரர் சுனில் நரின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
0 comments :
Post a Comment