இந்தியாவில் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்திருக்கும் இந்த நிலையில் மத்திய அரசு நாடு முழுவதும் 2½ கோடி பேருக்கு இலவச செல்போன்களை வழங்க முடிவு செய்திருக்கிறது.
மின்னணு மயமாவதில் உள்ள இடைவெளியை பூர்த்தி செய்யும் வகையில் குறைந்த விலையில், அதே சமயம் தரமான செல்போன்கள் வழங்கப்படுகிறது.
கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு செல்போன்கள் வழங்குவதன் மூலம் சமுதாய பொருளாதாரம் மேம்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.4,850கோடி செலவாகும் என்றும், இந்த நிதியை ‘யூனிவர்சல் சர்வீஸ் ஆப்ளிகேஷன் பண்டு’ (யு.எஸ்.ஓ.எப்) வழங்கும்.
இதன் மூலம் கிராமப்புற மக்களுக்கு விவசாயம், சுகாதாரம், கல்வி, நிதி சேவை, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு ஆகிய தகவல்கள் எஸ்.எம்.எஸ். மூலம் அளிக்கப்படும். இதன் காரணமாக அவர்களின் வாழ்க்கை தரம் உயரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இது கிராமப்புற தொலைபேசி சேவைகளை அதிகரிப்பதால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் இதன் தாக்கம் தெரியும். பொருளாதார,சமுதாய சேவைகள் வழங்குவதன் மூலம் அவர்களது வறுமை நிலையும் படிப்படியாக மறையும். அடுத்த 4 ஆண்டுகளில் இந்த செல்போன்கள் வழங்கப்படும்.
முதல் ஆண்டில் 25 லட்சம் பயனாளிகளுக்கும், 2-வது ஆண்டில் 50லட்சம் பயனாளிகளுக்கும், 3-வது ஆண்டில் 75 லட்சம் பேருக்கும், 4-வது ஆண்டில் ஒரு கோடி பேருக்கும் வழங்கப்படும். செல்போனின் விலை ரூ.2,240. இதில் உப பொருட்கள், 3 வருட உத்தரவாதம், சிம் கார்டு ஆகியவற்றுக்காக ரூ.1200 அடங்கும்.
நிர்வாகம் மற்றும் விநியோக செலவு ரூ.320. இதில் பயனாளிகளின் பங்களிப்பாக ரூ.300வழங்க வேண்டும். எஸ்.எம்.எஸ்., குரல் தகவல் ஆகிய வசதிகள் இதில் இருக்கும். இந்த பயனாளிகளை மாநில அரசுகள் தான் தேர்வு செய்யும். வீட்டுக்கு ஒருவருக்கு தான் இவை வழங்கப்படும்.
பெண்களுக்கு குறிப்பாக மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்ட பயனாளிகளுக்கு தான் இந்த செல்போன்கள் வழங்கப்பட இருக்கிறது. செல்போன்கள் வழங்கப்பட்ட பிறகு மாதந்தோறும் ரூ.30-க்கு ரீசார்ஜ் வீதம் 2 வருடங்களுக்கு இந்த சேவை இருக்கும்.

இந்த திட்டத்தை பி.எஸ்.என்.எல். நிறுவனம் செயல்படுத்தும். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று கிராமப்புறங்களில் 2017-ம் ஆண்டில் 70 சதவீதம் தொலைபேசி வசதியும், 2020-ம் ஆண்டில் 100 சதவீதம் எனவும் உயர்த்துவது தான் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

0 comments :
Post a Comment