பானையில் தலை சிக்கிக் கொண்ட 2 வயதுக் குழந்தை - அதிர்ச்சி வீடியோ இணைப்பு

கேரளாவில் பானையில் தலை சிக்கிக் கொண்டதால் 2 வயதுக் குழந்தை 3 மணி நேரம் தவியாய்த் தவித்தது.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பு. இவரது மனைவி மோனிசா. இத்தம்பதியரின் ஒரே மகள் அனன்யா (2 வயது), சில வாரங்களுக்கு முன்னர் தன் பாட்டி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தாள்.

பெற்றோர் இருவரும் வெளியே சென்றிருந்த அவ்வேளையில், சுட்டிக் குழந்தையான அனன்யா

ஒரு பானையை எடுத்து விளையாடியபோது அது எதிர்பாராதவிதமாகக் குழந்தையின் தலையில் சிக்கிக் கொண்டது.

இதனால் பயந்துபோன அந்த குழந்தை வீறிட்டு அழத் தொடங்கியது. குழந்தையின் சத்தம் கேட்டு ஓடி வந்தபாட்டியும் அண்டை வீட்டுக்காரர்களும், பலவிதமாக முயற்சித் தும் பானையை அகற்ற முடியவில்லை.

அருகிலுள்ள மருத்துவ மனைக்குச் சென்றும் பலன் இல்லை. இறுதியில் அப்பகுதியில் உள்ள வெல்டிங் பட்டறை நடத்தும் ஒருவர் பானையை அறுத்து எடுத்தார். இதன் பிறகே குழந்தை சிரிக்கத் தொடங்கியது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :