பொத்துவில் பிரதேசத்தில் 250 மில்லியன் ரூபா செலவில் பல சேவைகள்.



(சலீம் ரமீஸ்)

பொத்துவில் பிரதேசத்தில் 250 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீதிகளும்,100 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர்ப்பாசன திட்டங்களும் மிக விரைவில் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி,நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி,நீர்ப்பாசன அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் பொத்துவில் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர்ப்பாசனம்,வீதி அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் தொடர்பான கூட்டம் இன்று(2013.10.07) பொத்துவில் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.இதில் தலைமை வகித்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இக் கூட்டத்தில் எதிர் வரும் 10ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ள செம்மணிக்குளம் அபிவிருத்தி,தஹறாம்பளை வீதி அபிவிருத்தி உள்ளடங்களாக மிக விரைவில் மேற்கொள்ளப்படவுள்ள நாவலாறு அணைக்கட்டு, நெல்லிக்கணத்தை அணைக்கட்டு,துவ்வையாறு அணைக்கட்டு,தஹறாம்பளை பாலம்,2014ஆம் ஆண்டின் ஜெய்கா கிராம அபிவிருத்தி திட்டம்,பொத்துவில் பிரதேச வீதிகள் அமைப்பு,களப்புக்கட்டு வடிகான் அமைப்பு போன்ற அபிவிருத்தி பணிகள் தொடர்பாகவும் இக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

பொத்துவில் பிரதேசத்தில் இடம் பெற்ற அபிவிருத்தி வேலைகளை துரிதமாக செய்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளிடம் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை பணிப்புரை விடுத்தார்.

இந்த நிகழ்வில் பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஐ.எம்.தௌபீக்,பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.ஏ.வாஸீத்,அமைச்சர் அதாஉல்லாவின் இணைப்புச் செயலாளர் ஏ.பி.தாவூத்,பிரதி நீர்ப்பாசன பனிப்பாளர் யு.எல்.ஏ.நஸார்,வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் அம்பாரை மாவட்ட பிரதம பொறியியலாளர் எ.எம்.ரிஸ்வி,அம்பாறை உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்சாத்,பிரதம பொறியியலாளர் ஐ.எல்.எ.பாரி,அமைச்சரின் இணைப்புச் செயலாளர் யு.எல்.உவைஸ்,மக்கள் தொடர்பு அதிகாரி எம்.எஸ்.எம்.ஜஃபர் உட்பட மத்திய,மாகாண அமைச்சுக்களின் நீர்ப்பாசனம்,வீதி அபிவிருத்தி,திணைக்களங்களின் தலைவர்கள்,இராணுவ மற்றும் பொலிஸ் உயரதிகாரிகளும்,விவசாய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

 




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :