தலைமைத்துவம் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காது பொறுமையை கையாளவேண்டும்-அதாஉல்லா


ஏ.ஜி.ஏ.கபூர்,அக்கரைப்பற்று

லைமைத்துவம் என்பது உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காது பொறுமையுடன் நிலைமைகளை நன்கு அவதானித்து தேவையானபோது பேசவேண்டிய இடத்தில் பொறுப்புடன் பேசுவதுதான் தலைமைத்துவமாகும் என உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.

உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.; அதாஉல்லா அவர்களின் பெரு முயற்சியின் காரணமாக பெறப்பட்ட உலகவங்கியின் 234 மில்லியன் ருபாநிதியுதவியுடன் காபட் வீதிகளாக நிர்மாணிக்கப்படவுள்ள அக்கரைப்பற்று மா நகர சபை பிரதேசத்திலுள்ள ஐந்து கிலோ மீற்றர் நீளமான ஐந்து வீதிகளின் நிர்மானப் பணிகளின் ஆரம்ப நிகழ்வு கடந்த சனிக்கிழமை (24.08.2013;) பிற்பகல் இடம் பெற்றதையடுத்து அக்கரைப்பற்று ஜின்னா வீதிச் சந்தியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தி;ல் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அக்கரைப்பற்று ஜும்ஆ புதுப்பள்ளி; வாயல் தலைவர் அல்-ஹாஜ் ஏ.எல்.ஏ.றஸீட் தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்: பத்திரிகையில் செய்தி வரவேண்டும், வாக்குகளைப் பெற வேண்டும் என்பதற்காக தலைமைத்துவம் பேச முடியாது. ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அரசில் இருந்து கொண்டு பொறுப்பற்ற விதத்தில கோமாளித்தனமாகவும், சிறுபிள்ளைத்தனமாகவும்; கருத்துக்களை வெளியிட்டு அது நடக்காவிட்டால் அது முழு முஸ்லிம் சமுதாயத்திற்கும் அவமானமாகும்.


இந் நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் நமது நாட்டிற்கு விசுவாசமாக இருக்க வேண்டும். இதையே எமது இஸ்லாம் சமயமும் கூறுகின்றது. பல்லின மக்கள் வாழும் எமது நாட்டில் சகல மக்களையும் சமமாக மதிக்கவேண்டும்.அந்த உணர்வு எம்மிடம் எப்போதும் இருக்க வேண்டும்.


இன்று பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதானால் அறிவு ரீதியாகவும், ஆத்மீக ரீதியாகவும் சிந்திக்கக் கூடியவர்களிடம்தான்; பேசமுடியும். ஆனால் உணர்ச்சிவசப்படுபவர்களிடம் பேச முடியாது. நாம் எப்போதும் அறிவு ரீதியாகவும், ஆத்மீக ரீதியாக சிந்தி;த்துப பிரச்சினைகளைத்; தீர்க்க வேண்டும். பெருமானாரின் காலத்தில் பிரச்சினைகளை திட்டமிட்ட முறையில் ஆன்மீகத்துடன் பேசினார்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றார்கள்.

இன்று முஸ்லிம்களுக்கென்று ஒரு செய்தி நிறுவனம் இல்லை. உலகில் உள்ள சகல செய்தி நிறுவனங்களும் அமெரிக்காவிற்கு சார்பாகவுள்ளது.

சம்புக்களப்பு வடிச்சல் தொடர்பான வேலைகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவ் வேலைகன் முடிவடைய முன்னர் அது பற்றி சிலர் பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும் பல்வேறு அறிக்கைகளை விடுகின்றனர். வேலைகள் முடியுமுன்னர் அவசரப்பட்டு அறிக்கைகளை விட்டு மக்களைப் பிழையாக வழி நடாத்த முற்படுகின்றனர். இது எமது மக்களுக்குத் தெரியும் எனவும் மேலும் தெரிவித்தார்.

இந் நிகழ்வின்போது உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, மற்றும் மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை ஆகியோர்களின் சேவையைப் பாராட்டி அக்கரைப்பற்று மாநகர முதல்வர் ஏ.அஹமட் ஸக்கி பிரதி முதல்வர் எம்.எம்.எம்.றிஸாம், மா நகர உறுப்பினர்கள், ,மாநகர ஆணையாளர் ஏ.எல்.அஸ்மி ஆகியோர்; இணைந்து நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தனர்.

இந் நிகழ்வில் அக்கரைப்பற்று மா நகர முதல்வர் ஏ.அஹமட் ஸக்கி, பிரதி மேயர் எம்.எம்.எம்.றிஸாம்,அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.றாஸீக், மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் உதவிச் செயலாளர் எம்.ஐ.சலாஹுதீன், ஆகியோர்களும் சிறப்பு அதிதிகளாக அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஜி.அஸ்மி, என்.எம்.நஜுமுதீன், கே.எல்.எம்.ஸறூக், ஏ.எல்.ஜுனைதீன், எம்.எம்.நிலாம், மாகாண வீதி அபிவிருத்தி திணைக்கள மாகாணப் பணிப்பாளர் பி.கருணை நாதன், மாநகர ஆணையாளர் ஏ.எல்.அஸ்மி, அமைச்சர் அதாஉல்லாவின் இணைப்புச் செயலாளர் ஏ.பி.தாவூத், பொதுசனத் தொடர்பு அதிகாரியும் மாநகரசபை உறுப்பினருமான எஸ்.எம்.ஸபீஸ், மாகாண அமைச்சர் உதுமா லெவ்வையின் இணைப்பாளர் யூ.எல்.உவைஸ், பள்ளிவாயல்களின் தலைவர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :