அனுராதபுரம் மல்வத்து ஓயா லேன் பள்ளிவாசல் இன்று அகற்றப்பட்டது

நுராதபுரம் மல்வத்து ஓயா லேன் பள்ளிவாசல் இன்று அநுராதபுரம் மாநகர சபையினால் அகற்றப்பட்டுள்ளது.

இப் பள்ளிவாசல் இதற்கு முன்னர் பல தடவைகள் இனந்தெரியாதோரின் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்த நிலையிலேயே இன்று மாநகர சபையினால் அகற்றப்பட்டுள்ளது.

கடந்த வருடம் தாக்குதல் நடத்தப்பட்டதிலிருந்து இப் பள்ளிவாசலின் இருப்பு தொடர்பில் சர்ச்சை நீடித்துக் கொண்டே வந்தது. இருப்பினும் குறித்த பள்ளிவாசல் மீது எவரும் தாக்குதல் நடத்த இடமளிக்கக் கூடாது எனவும் உரிய பாதுகாப்பு வழங்குமாறும் பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து பிரதேசத்தின் அமைதி கருதி இப்பள்ளிவாசலை நிர்வாகம் மூடியிருந்தது. எனினும் பிரதேச முஸ்லிம்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் திறக்கப்பட்டு வணக்க வழிபாடுகள் நடைபெற்று வந்தன. கடந்த ரமழான் மாத்திலும் இப் பள்ளிவாசலில் சகல அமல்களும் தொடர்ச்சியாக இடம்பெற்றன.

இந்நிலையிலேயே இன்று மாநகர சபையினால் இப் பள்ளிவாசல் உடைத்து அகற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அநுராதபுரம் மத்திய நுவாரகம் கிழக்கு பிரதேச செயலாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த பள்ளிவாசல் விடயத்தை அநுராதபுரம் மாநகர சபையே கையாள்வதாக குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பில் நேற்று முன்தினம் மாநகர ஆணையாளரை சந்தித்த பிரதேச முஸ்லிம்கள் தமக்கு மாற்று ஏற்பாடு செய்து வரும்வரை குறித்த பள்ளிவாசலை அகற்ற வேண்டாம் என வேண்டுகோள்விடுத்திருந்தனர்.

கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் திகதி இப் பள்ளிவாசல் பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினரால் தாக்கப்பட்டது. அச் சமயம் மூன்று மாதங்களுக்குள் இப் பள்ளிவாசலை அகற்ற வேண்டும் என தாக்குதல்தாரர்கள் காலக்கெடு விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :