வடக்கு மாகாணசபைத்தேர்தல் நீதியாகவும், நியாயமாகவும், நம்பகமான முறையிலும் நடைபெறும் - இந்தியா

திர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள வடக்கு மாகாணசபைத் தேர்தல் நீதியாகவும், நியாயமாகவும், நம்பகமான முறையிலும் நடைபெறும் என்று இந்தியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சிங்ஹா, இன்று இந்தியாவின் 67வது சுதந்திர நாளை முன்னிட்டு இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசாங்கத்தின் அண்மைக்கால அரசியல் நிலவரங்கள் தொடர்பாக இந்தியா தனது கருத்தை தெரியப்படுத்தியுள்ளது. மேலும், தேசிய ஒருமைப்பாட்டினை ஏற்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்பும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம்,நிலையான அரசியல் தீர்வு ஒன்று காண்பதாக, இந்தியாவுக்கும், அனைத்துலக சமூகத்துக்கும் அளித்த வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

சமத்துவம், நீதி, கௌரவம், சுயமரியாதையுடன் கூடிய அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை உறுதிப்படுத்துவதன் மூலமே,இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட எல்லா குடிமக்களும் சம பங்காளராக வாழ முடியும் என்று தெரிவித்தார். 

போரின் முடிவு, எல்லா சமூகங்களும் இலங்கையில் நல்ல எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்வதற்கான இணையற்ற வாய்ப்பை வழங்கியுள்ளது இந்திய உயர்ஸ்தானிகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -