புத்தகயா தாக்குதலுக்கு துக்கம் தெரிவிக்கும் முஸ்லிம் தலைமைகள் இலங்கையில் பள்ளிவாயல்கள் தாக்குதலின் போது தூக்கத்தில் இருப்பது ஏன் முஸ்லிம் மக்கள் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இது பற்றி அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது,
இந்தியாவில் உள்ள பௌத்தாலயம் தாக்கப்பட்ட போது அதற்காக ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் காங்கிரஸ் தலைமை, அமைச்சர் பௌசி போன்றோர் உடனடியாக தமது கண்டனங்களையும் துக்கத்தையும் பகிரங்கமாக தெரிவித்திருந்தனர்.
ஆனால் இலங்கையில் பல பள்ளிவாயல்கள் தாக்கப்பட்ட போது அண்மையில் கிறேன்ட்பாஸ் பள்ளிவாயலும் தாக்கப்பட்ட போது இது பற்றி தமது துக்கத்தையோ கண்டனத்தையோ தெரிவிக்காமல் ஆழ்ந்த தூக்கத்திலிருப்பதை காண முடிகிறது.
எந்தவொரு சமயத்தின் வணக்கஸ்தலத்தையும் தாக்குவது அந்த மதத்தை தாக்குவது போன்றதாகும் என்பதே எமது நிலைப்பாடு. ஆனால் ஒரு சமயத்தின் வணக்கஸ்தலத்தை தாக்கலாம் இன்னொரு சமயஸ்தலத்தை மட்டும் தாக்கக்கூடாது என்பது போன்ற சிந்தனை கண்டிக்கத்தக்கதாகும்.

அதே போல் குண்டு வைத்து தாக்குதல் நடத்தினால்தான் தாக்குதல் என்றும் கல் எறிந்து தாக்கினால் அது தாக்குதல் இல்லை போலவும் முஸ்லிம் தலைவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்களா எனவும் கேட்க வேண்டியுள்ளது.
அண்மையில் மட்டக்களப்பில் இந்துக்கோயில்கள் தாக்கப்பட்ட போது அதனை கண்டிக்க முடியாதவர்களாக இருந்த இவர்கள் புத்தகயா என்றதும் விழுந்தடித்துக்கொண்டு கண்டிப்பதன் மூலம் எந்தளவுக்கு இவர்கள் பெரும்பான்மையினரின் கருணைக்கு அடிமையாகிப்போயுள்ளார்கள் என்பது தெரிகிறது.

புத்தகயா தாக்குதலுக்கு முஸ்லிம் அமைச்சர்களும் உலமா சபையும் கண்டனம் தெரிவித்தது போல் கிறேன்ட்பாஸ் பள்ளி தாக்குதலுக்கு அரசாங்கமோ, பௌத்த மத பீடமோ ஏன் உலமா சபையோ முஸ்லிம் அமைச்சர்களோ இதுவரை எத்தகைய கண்டனத்தையும் வெளியிடவில்லை.
கிறேன்ட்பாஸ் பள்ளிவாயல் சட்டபூர்வமற்ற வகையில் கட்டப்பட்டிருந்தால் அதனை அரசாங்கத்திடம் முறையிட முடியும். அதனை விடுத்து அதிகாலை வேளையில் பள்ளி வாயல் மீது தாக்குதல் நடத்தியமையை அரசாங்கமும் முஸ்லிம் அமைச்சர்களும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்றால் இந்த நாட்டின் சட்டங்களுக்கு என்ன நடந்தது என்று கேட்கிறோம்.
ஆகவே சமயஸ்தலங்கள் தாக்கப்படுவதை தடுப்பதுடன் அவற்றை தாக்குவோர் யாராக இருந்தாலும் அவர்களை பகிரங்கமாக கைது செய்யவும் நடவடிக்கை எடுப்பதுடன் முஸ்லிம் தலைமைகள் தொடர்ந்தும் பதவிகளுக்கு சோரம் போவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம் என முபாறக் மௌலவி குறிப்பிட்டுள்ளார்.

0 comments :
Post a Comment