மட்டக்களப்பில் ஆசிரியை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

ட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் ஆசிரியை ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

நேற்று (07) இரவு 8.30 மணியளவில் செங்கலடி, ராமேஸ்புரம் என்ற பகுதியில் உள்ள வீட்டில் த.அனுஸியா (35) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்டவர் உன்னிச்சைப் பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் ஆசிரியையாக கடமையாற்றுவதாகவும் உயிரிழந்தவரின் கணவன் தபால் அதிபராக கடமையாற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தினை மீட்டுள்ளதுடன் சடலத்தினை பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இது தொடர்பிலான விசாரணையை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :