திருமணம் வேண்டாம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் -ஸ்ருதிஹாஸன்


திருமணம் செய்து கொள்ளப் பிடிக்கவில்லை. ஆனால் குழந்தை பெற்றுக் கொள்ள ஆசையாக உள்ளது என்று நடிகை ஸ்ருதிஹாஸன் பேட்டி கொடுத்து அதிர வைத்துள்ளார்.

நடிகர் கமல்ஹாஸனின் மகளும் முன்னணி நடிகையுமான ஸ்ருதிஹாஸன் சமீபத்தில் திருமணம் குறித்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில், "எனது சுதந்திரத்தை எதற்காகவும் யாருக்காவும் இழக்க விரும்பவில்லை. நல்ல, அன்பான ஆண் துணை கிடைப்பது கடினமாக உள்ளது. என்னை என் போக்கில் ஏற்கும் ஆண் கிடைப்பாரா என்பது சந்தேகம்தான்.

உறவு என்ற பெயரில் என் சுதந்திரத்தை யாரும் களவாடிவிடக் கூடாது. இதில் இரண்டாவது கருத்துக்கே இடமில்லை.

எனக்கு திருமணத்திலோ, கேர்ள் பிரண்ட் போன்ற உறவுகளிலோ நம்பிக்கையில்லை. ஆனால் குழந்தைகள் ரொம்பப் பிடிக்கும். குழந்தை பெற்றுக் கொள்ள ஆசையாக உள்ளது. ஏன் என்று காரணம் புரியவில்லை," என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :